Step into an infinite world of stories
Fiction
நம் பண்டைய காலத்தில் திருநங்கைகள் அரசர்களாய் சமய மரபுகளை உருவாக்கியவர்களாக, ஆன்மிக வழிகாட்டிகளாக இருந்திருக்கின்றனர். மத பீடங்களைக் கூட நிறுவியிருக்கின்றனர்.
அலி, அரவாணி போன்ற அடையாளப் பெயர்களுடன் அழைக்கப்பட்டு கேலிப் பேசப்பட்டு வந்த நங்கைகள் இன்று மிக மரியாதையான இடத்தில் அனைவராலும் மதிக்கப்படும் இடத்தில் இருக்கிறார்கள் என்பது நமக்கு கொஞ்சம் நிம்மதியை தருவதாய் இருக்கிறது.
ஆனால் இந்த நிலைக்கு வருவதற்கு அவர்கள் பட்ட அவமானங்கள் இந்த சமுதாயம் கொடுத்து வந்த தொல்லைகள் உறவுகளும் சுற்றமும் படுத்தியபாடுகள். அதனால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் தற்கொலை எண்ணங்கள் என மிகக் கொடூரமான வாழ்க்கை பயணத்தை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிய வரும்போது மனம் கனத்துப் போகிறது.
இந்த கட்டுரைகளின் ஆசிரியர் லதா சரவணன் இதுவரை 25 நூல்களுக்கு மேல் எழுதி தன்னை அடையாளப்படுத்தியிருந்தாலும் காகிதப்பூக்கள் என்ற அவரின் நூல் மூலம் திருநங்கைகளின் வாழ்க்கையை மிகத் துல்லியமாய் படம்பிடித்துக்காட்டி தன்னை மேலும் திடப்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
அலிகளும், அரவாணிகளும் எப்படி திருநங்கைகளாய் உருவெடுக்கின்றனர் என்பதை இத்தனை வலிகளோடு பதிவுசெய்த வேறு நூல் தமிழில் இல்லையென்றே சொல்லமுடியும் அத்தனை வலிகளையும் படிக்கும் நமக்கு கடத்தி அந்த வலிகளிலிருந்து நாம் ஓடிவிட வேண்டும் என்ற பதைபதைப்பை நமக்குள் கடத்தியிருப்பது படைப்பாளியின் எழுத்து ஆளுமைக்குச் சான்று.
அதேபோன்ற மன பதைபதைப்பை ஏற்படுத்துகிறது லதா சரவணனின் "சாதிக்கத் துடிக்கும் நங்கைகள்" நூலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நங்கைகளின் வாழ்க்கைப் பயணமும் அதில் இருக்கும் மேடு பள்ளங்களும் 16 கட்டுரை என்று சொல்லிவிடாதபடி 16 ஜீவன்களின் வாழ்க்கைப் போராட்டத்தை கவிதையின் இலக்கணத்தோடு காதல் கலந்து அன்பின் வெளிப்பாடாய் வார்த்தைகளைப் போட்டு அந்த திருநங்கைகளின் இடத்தில் நாம் இருந்திருந்தால் நம் நிலை என்னவாயிருக்கும் என் படிக்கும் ஒவ்வொருவரையும் யோசிக்க வைத்திருக்கிறது லதா சரவணனின் எழுத்துக்கள்.
இனிமேலாவது சாலைகளில் திருநங்கைகளை பார்க்க நேரிட்டால் அவர்களுக்குப் பின்னும் ஓர் அழகான வாழ்க்கை இருந்திருக்கிறது ஒரு அவலமான வாழ்க்கையையும் தாண்டிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என இந்த கட்டுரைகளைப் படிப்பவர்களை நினைக்க வைத்திருக்கிறது 'சாதிக்கத் துடிக்கும் நங்கைகள்'.
Release date
Ebook: 6 April 2020
English
India