Step into an infinite world of stories
அமரர் எஸ். ஏ. பி.க்கு நேரு குடும்பத்தின் மீது அபார மதிப்பு, பக்தி. நேருவின் காலத்துக்குப் பிறகு, மத்திய அரசில் சரியான தலைமை கிடைக்காமல் தேசம் திண்டாடியபோது இந்திராகாந்தி பிரதம மந்திரியாகப் பதவியேற்றதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்திராகாந்தி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தி, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டபோது, அதை ஆதரித்த ஒரே பத்திரிகை ஆசிரியர் எஸ். ஏ. பி. தான்.
இந்திராகாந்தி பதவி இழந்தபோது எஸ். ஏ. பி. அளவற்ற துயரம் அடைந்தார். அந்த அரசியல் பின்னணிகளை வைத்து, ஆனால் துளியும் அரசியல் நெடி அடிக்காமல், ஒரு நாவல் எழுதும்படி என்னைத் தூண்டினார். ஊக்கம் தந்தார். அவ்வப்போது ஆலோசனை வழங்கினார். 1978ம் ஆண்டு வாக்கில் ‘தர்மங்கள் சிரிக்கின்றன' என்ற தலைப்பில் நான் தொடர்கதை எழுதியதின் பின்னணி இதுதான்.
கதாநாயகிக்கு இந்து என்று பெயர் சூட்டியதோடு, பல அந்த நாளைய அரசியல் தலைவர்களின் குணாதிசயங்களையும் இந்தக் கதையில் கலந்தேன். அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு, அவர்கள் யார் யாரென்று புரியும்.
கதையின் ஓர் அம்சம்தான் அப்படியே தவிர, இது ஒரு காதல் கதை. இப்போது புரூப் படிக்கையில், இந்து - ஜெயந்த் காதல் நிறைவேறியதாக முடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜெயந்தை மனமார நேசித்துவிட்டு, நெருங்கிப் பழகிவிட்டு, பிறகு வேறொருவனைக் கைப்பிடிப்பதாக எழுதியிருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். (வாசகர்கள் எப்படி நினைக்கிறார்களோ!)
ரா. கி. ரங்கராஜன்
Release date
Ebook: 2 June 2020
English
India