Step into an infinite world of stories
Fiction
விசும்பின் துளியொன்று விரலில் வந்து அமர்ந்தது. நான் கண்ணை உயர்த்தி விண்ணைப் பார்த்தேன். சற்றே சாய்ந்து படுத்திருந்த யானைகளைப் போலச் சாம்பல் நிற மேகங்கள் அடிவானில் அடர்ந்திருந்தன. சரசரவென்று சற்று நேரத்தில் ஜரிகை இழைகளைப் போல மழை இறங்கும்.
இயற்கை எழுதும் ஓவியங்களில் மழைக்கு நிகராக இன்னொன்று இல்லை. அண்டை வீட்டுத் தென்னங்கீற்றுகள் அவசர அவசரமாக அசைகின்றன. அவை வான் மழையை வரவேற்கின்றனவா அல்லது நகர்ப்புறத்து நர்சரிக் குழந்தைகளைப் போல போ போ என்று துரத்துகின்றனவா? விரைந்து இறங்கிய காக்கை ஒன்று வேம்பின் கிளைகளில் உடகார்ந்து உடலைச் சிலுப்பிக் கொள்கிறது. எதிர்பாராத நேரத்தில் இறங்கிய மழையால் பயணம் தடைப்பட்டு அது பாதியில் திரும்பியிருக்க வேண்டும். மேகத்தைப் பார்த்துக் காவென்று கரைந்து கண்டனம் தெரிவித்தது காகம். கண்ணுக்குத் தெரியாமல் கத்திக் கொண்டு இருக்கிறது கன்று ஒன்று. ஐயோ நனைகிறேனே,அவிழ்த்துக் கொண்டு போய் வேறிடத்தில் கட்டுங்கள் என்கிறதா அதன் குரல்?. அல்லது ஆனந்தத்தில் சிலிர்த்துக் கொண்டு குஷியைப் பகிர்ந்து கொள்ளக் கூப்பிடுகிறதா?
Release date
Ebook: 5 January 2022
English
India