Step into an infinite world of stories
Fiction
நான் சிறுகதை எழுத நேர்ந்தது ஒரு விபத்துபோல் நிகழ்ந்தது. வெகு ஜனத்திரள் நடுவே முகமற்றுப் போகிற சாதாரண மனிதர்களைப் பற்றி என் முதல் சிறுகதை அமைந்தது. அதுவே என்னின் இன்னொரு முகமும் ஆயிற்று.
இந்தக் கதைகள் வாழ்வின் மீது எனக்குள்ள காதலை மட்டுமல்ல, என் எழுத்தின் பருவங்களையும் பதிவு செய்கின்றன. நான் எழுதத் துவங்கிய புதிதில், நுட்பங்கள் நிறைந்த நாகலிங்கப்பூவைப் போலத் தோன்றியது வாழ்க்கை. அந்த நுட்பங்களுக்குரிய அழகு, அதற்கேற்ற நடையைத் தேர்ந்து கொண்டன.
என் கதைகள், நம் சமகால வாழ்க்கை நமக்கு வீசிய கேள்விகளைப் பற்றிய ஓர் உரத்த சிந்தனை. ஆனால் அவை உங்களுக்கு எந்த சித்தாந்தத்தையும் சிபாரிசு செய்வதில்லை. இந்தக் கதைகளில் சில உங்களைப் பரவசப்படுத்தலாம். சில துன்புறுத்தலாம். சில சிரிக்க வைக்கலாம். சில ஆத்திரமூட்டலாம். சில புதிய தரிசனங்களைத் தரலாம். சில விமர்சனங்களை எழுப்பலாம். சில உங்களை என் கருத்துக்களோடு உங்களை உடன்படவைக்கலாம். சில முரண்படச் செய்யலாம். ஆனால் அவற்றின் நோக்கம் அதுவல்ல. உங்களை உங்களது மூளையைக் கொண்டே சிந்திக்க வைப்பதுதான் அவற்றின் நோக்கம். ஒரு படைப்பாளியின் மூளையை விட வாசகனின் முளை எந்த விதத்திலும் குறைவானதல்ல.
Release date
Ebook: 15 February 2022
English
India