Step into an infinite world of stories
Audiobook Proudly published by Itsdiff Entertainment for Aurality Book and Ebook by Swasam Publications
இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல சுதேச சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது. எத்தனை கெடு விதித்தும் பல சமஸ்தானங்கள் இந்தியாவின் கீழ் இணையாமல் போக்குக் காட்டி வந்தன. அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தின் கீழ் கொண்டு வரவேண்டிய மாபெரும் பொறுப்பு நேருவின் அரசாங்கத்துக்கு இருந்தது. இந்த மாபெரும் வேலைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள் வல்லபபாய் படேலும் வி.பி.மேனனும். பெரிய அரண்மனை, ஏவல் செய்ய வேலைக்காரர்கள், அந்தப்புரம் முழுக்க ஆசை நாயகிகள், அவர்களுடனான காமக் களியாட்டம், ஆடம்பர வாழ்க்கை - இவற்றை மகாராஜாக்கள் விட்டுத் தர தயாராக இருக்கவில்லை. படேலின் கண்டிப்பில் பலர் உடனே இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டாலும், சிலர் முரண்டு பிடித்தனர். பல்வேறு சலுகைகள் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டி இருந்தது. அப்படியும் ஒத்துக்கொள்ளாதவர்களை இராணுவ ரீதியாக சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது. இந்தியா ஒரு பரந்துவிரிந்த தேசம். பல்வேறு கலாசாரம், மொழி, நிலப் பாகுபாடுகள் நிறைந்த தேசம். இப்படிப்பட்ட தேசத்தில், அதுவும் சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்களிலேயே இவற்றைச் செய்வது எத்தனை பெரிய சவால்? உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் மாபெரும் சாதனையாக இந்த சமஸ்தானங்களின் இணைப்பைச் சொல்லலாம். இலந்தை சு இராமசாமி திறம்பட இந்த நூலை எழுதி இருக்கிறார். பல்வேறு சம்பவங்களை ஆதாரத்துடன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
எழுத்தாளர் சு இராமசாமி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். தயாரித்து வழங்குவது
Aurality by Itsdiff Entertainment
© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798347799138
Release date
Audiobook: 19 November 2024
English
India