Step into an infinite world of stories
1 of 10
Non-Fiction
ஒரு தலை காதல், இருதலை காதல், காதல் பிரிவு இவர்களுக்கான கவிதைகளைச் சுமந்து வருகிறது “காதல் இதுதானா” என்ற கவிப் படைப்பு. ஒரு தலை காதல் செய்பவர்கள் காதலை சொல்லாமலே ஒரு நிலை மகிழ்வை அடைந்து, அந்தவொரு நொடியின் ஆனந்தத்தில் “காதல் இதுதான்” என்பதை உணர்கிறார்கள். இருதலை காதல் செய்பவர்கள் அத்தனையும் பகிர்ந்து, இருவருக்குமானப் புரிதலை நெகிழ்ந்து “இதுதான் காதல்” என்பதையும் உணர்கிறார்கள். இவர்களைத் தாண்டி முதல் இரண்டு நிலைகளையும் கடந்து, காதல் பிரிவில் பிணைந்தவர்கள் “காதல் இதுதானா” என்று காதலைச் சலித்தே உணர்ந்தும் விடுகிறார்கள். இப்பார்வைகளில் படித்துரைக்க உங்களுக்கான கவிதைகளை மனதோடு தைத்து விட “காதல் இதுதானா” காத்திருக்கிறது. நிச்சயமாக இப்புத்தகத்தை படிக்கும் ஒரு கணம் ஏதாவது ஒரு கவிதை தங்களுக்காகவே எழுதப்பட்டிருப்பதை உணர்வீர்கள் என்பதில் ஐயமொன்றுமில்லை.
Release date
Ebook: 8 September 2025
English
India
