Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
அரிவைப்பருவத்தில் ரத்னா வெங்கட் எழுத வந்திருந்தாலும் அவர் வெகுகாலம் மனசுக்குள் எழுதிக் கொண்டேயிருந்திருக்கிறார் என்பதற்கு சாட்சி இந்த தொகுப்பு.
சொற்களின் புனைவில் வெட்டும் நெடுங்குறுக்குக் கோட்டு மின்னல்கள் கணத்தில் வெட்டி விதிர்க்கவைத்த பிறகும் மனசுக்குள் மறுபடி மறுபடி ஒளிர வைக்கிறது கவித்துவ வெளிச்சத்தை.
அகக்கவிதைகள் தவிர சமூக கவிதைகள், பிரார்த்தனை, கடவுளோடு உரையாடல், ஆட்டோ பொயட்டரி வகையைச் சார்ந்த தான் கவிதை எழுதுவதைப் பற்றியான கவிதைகள் என்று சில கூறுகளில் இவர் கவிதைகள் வகைப்பட்டாலும் முதல் தொகுப்புக்கான கோட்டா எதையும் கோராமல் கம்பீரமாக நிற்கிறது.
படித்து முடித்தபிறகும் - மீட்டிய விரல் மௌனித்தபின் ஒலிக்கும் நாதக்கார்வையாய் நல்லொலியின் மெல் அதிர்வை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன சில கவிதைகள்.
- ரவிசுப்பிரமணியன்.
Release date
Ebook: 12 August 2021
English
India