Step into an infinite world of stories
4
Non-Fiction
பயணம் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் நாம் பயணம் செய்யும் விதம்தான் மாறிக் கொண்டிருக்கிறது. பயணம் சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விளையாடப் போவதிலிருந்து தொடங்குகிறது. பால்ய காலம் வரை பயணங்கள் இலக்கோடுதான் போகிறது. பால்யத்தைக் கடந்தபின் தான் பயணம் இலக்கற்றப் பயணியாக சிறகை விரித்துக் கொள்கிறது. பயணம் என்பது கற்றுக் கொள்ளலே. ஒவ்வொரு பயணமும் ஒரு பாடம். கண்களால் மட்டும் உலகைப் புரிந்து கொண்டு விட முடியாது. அனுபவித்து, செறித்து ஆழ்ந்து, அறிந்து கொண்டு உலகோடு இணைந்துவிட வேண்டும் என்று பயணங்களின் காதலன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். பயணம் நமது அறிவை, அனுபவத்தை இன்னும் பெருக்குகிறது. நண்பர்களோடு சேர்ந்து செல்லும் இன்பச் சுற்றுலா பயணத்தின் தொடக்கமாகிறது. அந்தப் பயணத்திலும் ஒரு தேடல் இருக்கும். ஆனால், தனியாகச் செல்லும் பயணம் பெரும் வாழ்வை கண்முன் விரிக்கச் செய்யும். பல நிலப்பகுதிகள், பலவகை உணவுகள், பல தரப்பட்ட மனிதர்கள், பல்வேறு பழக்க வழக்கங்கள் என ஏராளமான அனுபவங்களை பயணம் கற்றுக் கொடுக்கும். ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்டம் முழுவதையும் சுற்றி வந்திருக்கிறேன். அதற்கடுத்து கேரளா முழுவதையும் நடந்தும், வாகனங்களிலும் கடக்க வேண்டும் என்கிற பேராசையின் முதல் பயண அனுபவங்களின் தொகுப்புதான் இந்த புத்தகம்.
Release date
Audiobook: 18 May 2025
English
India