Step into an infinite world of stories
Religion & Spirituality
பச்சைப் பசேலென்று பரந்து விரிந்த நிலப்பரப்புகள், வெள்ளை நிறத்தில் ஓடும் நதிகள், நீலநிறக் கடல் பகுதிகள், பசுமையான மலைப்பகுதிகள், மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கேரளாவின் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘கேரளா கடவுளின் தேசம்’(God's own country) என்ற வாசகம் கேரளாவிலுள்ள பல்வேறு கோயில்களைக் காணும் போது, உண்மையில் கேரளா கடவுளின் தேசம்தான் என்று அனைவரையும் சொல்ல வைத்து விடுகிறது.
பரசுராமர் தோற்றுவித்ததாகக் கருதப்படும் கேரளாவில் பல இந்து சமயக் கடவுள்களின் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோயில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய கோயில்கள், வித்தியாசமான அமைப்புகளையும், வழிபாடுகளையும் கொண்டதாகச் சில கோயில்கள் என்று ஒவ்வொரு கோயிலும், ஒரு புதிய செய்தியை அல்லது நல்லதொரு வழிகாட்டுதலை நமக்குத் தரக்கூடியதாக அமைந்திருக்கின்றன.
Release date
Ebook: 9 May 2022
English
India