Step into an infinite world of stories
Personal Development
பண்டிகைகள் நமக்கு உற்சாகத்தைக் கொடுப்பது மட்டுமல்ல. இறை அருளையும் நம் குடும்பத்தினருக்கு வாரி வழங்கக் கூடியவை. புதிதாகத் திருமணமாகி புது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகத் தொடங்கும் இல்லத்தரசிகள் பண்டிகைகளை தமது இல்லத்தில் விமர்சையாகக் கொண்டாடி மகிழ விரும்புவர். அதிலும் திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டால்... பண்டிகை நாளின் போது எப்படி பூஜை செய்வது? என்ன சுலோகம் சொல்லி தீபாராதனை காட்டுவது? என்ன மாதிரி கோலம் போட வேண்டும்? நைவேத்யம் என்ன வைக்க வேண்டும்? அதைத் தயாரிக்கும் முறை என்ன? இப்படிப் பலவித சந்தேகங்கள் அடுக்கடுக்காய் வரும். இதற்கு ஒரு தீர்வே இந்தப் புத்தகம். ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் மகளின் திருமணத்தின் போதும், குடித்தனம் வைக்கும் போதும் தாராளமாக இந்தப் புத்தகத்தை வாங்கி கையில் கொடுத்து விடலாம்.
ஒவ்வொரு பண்டிகையிலும் அதன் அடிப்படை மகத்துவத்தை, அதன் சிறப்பைப் பற்றி எழுதி இருக்கிறேன். அடுத்து எவ்வாறு கொண்டாட வேண்டும் என அருகிலிருந்து மகளுக்குக் கற்றுத் தருவது போல எழுதி இருக்கிறேன்.
அந்தந்த பண்டிகை சம்பந்தப்பட்ட கோலங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நான்கைந்து முறை போட்டுப் பழகி, பண்டிகை நாளில் கோலமிடலாம்.
அந்தந்த பண்டிகைக்குரிய தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள். கவசங்கள் இந்த நூலில் உள்ளன. நான் இயற்றி ஒலிநாடாக்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களையும் இதில் தொகுத்திருக்கிறேன். படிக்கும் வாசகர்கள் இந்த ஒலிநாடா தேவைப்பட்டால் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம்.
இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் இதன் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களது கடிதங்கள் எனது அடுத்தடுத்த நூல்களில் இணைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கீதா தெய்வசிகாமணி
Release date
Ebook: 30 September 2020
Tags
English
India