Step into an infinite world of stories
History
'கோவூர் கூனன்’ - வரலாற்றுப் புதினத்தை எழுதிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இப்பொழுது சரிபார்த்து, வெளியிடக் கொடுப்பதற்காக மீண்டும் படித்தேன். அப்போது என்ன எழுதியிருந்தோம் என்பது நினைவில் இல்லை. வளரும் இதழ் ஒன்று. மூன்று இதழ்களுக்கு வருமாறு வரலாற்றுக் கதை கேட்டார்கள். இப்போது பிரபலமாகியுள்ள திரு.ஜெயகாந்தனும் அந்த இதழில் எழுதியதாக நினைவு.
அங்கத்தில் குறைவுபட்ட கதைப் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொண்டு கதை எழுதும் எண்ணம் அப்போது இருந்தது. எனக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பும் அங்கக் குறைபாடுள்ளவர்கள் இருந்திருக்க முடியாதால் நேற்றைய சமூகம் இன்று வரலாறு அன்றோ? அதனால் பல்லவர் காலத்தில் நடந்ததாகக் கற்பனை செய்தேன்.
பல்லவ மன்னர்களுள் மகேந்திரவர்மனை, நரசிம்ம வர்மனைப் போன்று சிறப்பாக ஆட்சி புரிந்த பரமேச்வர வர்மன், ராஜசிம்மன் நந்திவர்மனைப் பற்றிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அந்தப் போதி தோன்றிய கற்பனைதான் கோவூர் கூனன்.
ஒரு கூனன். ஒரு நாட்டிய மகள், சிறைக்கூடத் தலைவர் - இவ்வளவு பேரையும் பல்லவர்கள் காலத்துக் கதைப் பாத்திரங்களாக்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேடமணிய வைத்தேன்.
ஆண்டுகள் மாறினாலும் பண்பு, நாகரிகம் குணநலன்கள் மாறாதல்லவா?
மாற்றுத் திறனாளிகள் என்று இப்போது சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள். கூனன் ஒருவனின் தியாகம் என் மனக் கண் முன் ஊர்ந்த புதினம் உருவாகிவிட்டது.
- விக்கிரமன்
Release date
Ebook: 18 May 2020
English
India