Step into an infinite world of stories
Fiction
சின்ன வயதிலிருந்து எங்கள் வீட்டில் நான் எம்.ஜி.ஆர் ரசிகன், எனது அண்ணன் பாஷா சிவாஜி ரசிகர். இப்படி தமிழ்நாட்டில் எல்லா இல்லங்களிலும் இருவகை ரசனையாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சில நேரங்களில் உடன்பிறப்புகளுக்கான எங்களுக்கிடையே எம்.ஜி.ஆர். சிவாஜி குறித்த வாக்குவாதம் தொடங்கி வார்த்தைகளின் தள்ளுமுள்ளுகளும், சிலநேரம் அது முற்றிப் போய் சிறிய கை கலப்பு வரை சென்றதும் உண்டு.
இன்றைக்கு அதை அசைப் போட்டு பார்த்தால், அதில் ஒளிரும் அறியாமை தெரியும்.
300கிலோ மீட்டருக்கு அப்பால் நின்று சினிமாவை ஒரு ரசிகனாகப் பார்த்து வந்த நான் அதே திரைப்படவுலகில் ஒரு பத்திரிகையாளனாக வருவேன் முன்னணி நட்சத்திரங்களுடன் சரிசமமாக உட்கார்ந்து பேசுவேன் என்பது கற்பனைக் கூட செய்யாதது.
கிடைத்த வேலைகளை செய்து கொண்டே எழுத்து முயற்சிகளில் கவனம் செலுத்தினேன். அவ்வாறு உருவாகியதே இந்நூல்...
Release date
Ebook: 1 June 2022
English
India