Step into an infinite world of stories
3
Short stories
நீ... ண்... ட இடைவெளிக்குப் பின் என் எழுத்துக்கள் அச்சுப் பூக்களாய் மலரப் போவதை நினைத்து சந்தோஷத் தூறலில் நனைந்து போனேன். கல்லூரியில் படித்த போது எழுத ஆரம்பித்தேன். கல்லூரி படிப்பு முடியும் மட்டும் எழுதினேன். அதன்பின், சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் என் எழுத்துக்கும், ஆர்வத்துக்கும் பெரிய திண்டுக்கல் பூட்டு பூட்டின. சாவியை தொலைத்து, சுமைகளை சுமந்து, வாழ்க்கையே போராட்டம் என்றானபின் எழுத்தாவது... ஆர்வமாவது!
ஒரு வெள்ளி விழா காலத்துக்குப் பின் மீண்டும் எழுத்து துளிர்விட ஆரம்பித்த போது சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். தினமலர், டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் என் முதல் கதையே ஆறுதல் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும் என்று எண்ணவில்லை. என் முதல் முயற்சிக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கு ஊக்கத்தைத் தருகிறது. தினமலரின் அந்த ஊக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் தினமலர் வாரமலரில் வெளிவந்து என் மேல் வெளிச்சம் பாய்ச்சியவை.
படிப்பாளிகளை, படைப்பாளிகளை ஊக்குவதில் முதலிடத்தில் இருக்கும் தினமலர் வாரமலரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். நல்ல படைப்புக்கு கூடுதல் மதிப்பாக திருவாளர் அந்துமணி அவர்களே பாராட்டி ஊக்குவிப்பது என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். இந்தக் கதைகளை வெளியிட்டு உதவிய பத்திரிகைகளுக்கும், புத்தகமாக என் கையில் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பதிப்பாளர், பத்திரிகையாளர் நரியார் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், நண்பர் பத்திரிகையாளர் சபீதா ஜோசப் அவர்களுக்கும் நன்றி.
அதே போல தினமலர் நாளிதழின் வாசகியான எனக்கு இந்த கதைகளுக்கான கருவை தந்தவை தினமலரில் வந்த சில செய்திகள் என்பதையும் இங்கு நன்றியுடன் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஒரு வாசகியாக எழுதத் தொடங்கிய நான் இன்னமும் ஒரு ரசிகையாகவே இந்த உலகை, உறவுகளை பார்க்கிறேன். பார்த்ததை, என்னைப் பாதித்ததை எழுதுகிறேன்.
ஜே. செல்லம் ஜெரினா
Release date
Ebook: 3 August 2020
English
India