Step into an infinite world of stories
History
சரித்திரப் பேராசிரியர் திரு சாண்டில்யன் அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்தார்கள். 'உடனே ஒரு சரித்திரக் கதைக்கான கதைச் சுருக்கம் வேண்டும், பிரபல வாரப் பதிப்பினர், உங்கள் தொடர்கதையை வெளியிட விரும்புகிறார்கள்' என்றார். அவரது அன்புக் கட்டளையைச் சிரமேற்கொண்டு உடனே தலைப்பையும் கொடுத்து, முதலிதழுக்கான அத்தியாயத்தையும் எழுதிக் கொடுத்தேன். பிறகு வாரா வாரம் வளர்ந்தவள்தான், 'மாறவர்மன் காதலி.'
'வீரபாண்டியனால் சோழ அரசகுமாரர்களுள் ஒருவன் கொல்லப்பட்டான்' என்ற சரித்திரச் சான்றின் சிறு துரும்பு ஒன்றைப் பற்றிக்கொண்டு மாறவர்மன் காதலியை எழுதத் தொடங்கினேன்.
சோழர்கள் பாண்டிய நாட்டை அடிமைப்படுத்தியிருந்த காலம். அடிமைத் தளையிலிருந்து சுதந்திர வேட்கை உடையவர்கள் கிளர்ந்து எழுவது இயற்கைதானே. நாட்டின் விடுதலைக்காகத் தங்களைத் தியாகம் செய்து கொள்ள முன் வந்த நால்வரின் சாகசங்களைக் கற்பனை வண்ணத்தால் தீட்டி எழுதப்பட்ட ஓவியமே மாறவர்மன் காதலி.
சரித்திரத் தொடர்கதை ‘மாறவர்மன் காதலி' முற்போக்குக் கருத்தினைக் கொண்ட இதல், நாட்டு விடுதலையை உயிரெனக் கருதிய கதாபாத்திரங்களைக் கொண்ட கதை ஒன்று வெளி வந்தது மிகச்சிறந்ததே!
- விக்கிரமன்
Release date
Ebook: 18 May 2020
English
India