Step into an infinite world of stories
Non-Fiction
பல்வேறு கணிதத் துறைகளில் முன்னணியில் இருந்தது இந்தியா. மாயச் சதுரங்கள், அதை அமைப்பது எப்படி, அதன் ரகசியங்கள், நம் வாழ்க்கையில் முன்னேற அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பன உள்ளிட்டவற்றை நமது பண்டைய நூல்கள் விரிவாக விளக்குகின்றன. பொழுது போக்கிலிருந்து விலகி அதன் சூக்ஷ்மங்களைக் காண நமது இதிஹாஸ, புராண அற நூல்களைத் தான் நாட வேண்டும். இவற்றிலிருந்து சேர்த்த குறிப்புகளின் ஒரு பகுதியே இந்த நூலாக அமைகிறது.
கணிதப் புதிர்களும், அறிவியல் புதிர்களும் மூளையைக் கூர்மையாக வைத்திருக்க உதவுபவை. சிக்கலான பிரச்சினைகளின் சிடுக்குகளை எடுத்து சரியான முடிவைக் காட்டும் ஆற்றலைக் கணிதப் புதிர்கள் உருவாக்குகின்றன. கணிதத்தில் ஆர்வத்தை ஊட்டவும், மூளையைக் கூர்மையாக்க உதவும் விதத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நூலில் உள்ள சில அத்தியாயங்களின் தலைப்புகள்: மாயச் சதுரம்,
8 x 8 என்ற அமைப்பிலான மாயச் சதுரம் உருவாக்கும் வழி!, கஜுராஹோ மாயச் சதுர மர்மம்! நவகிரகங்களும் அவற்றிற்குரிய மாயச் சதுரங்களும்! செல்வம் வேண்டுமா? இதோ இருக்கிறது குபேர சக்கரம்! மிக மிக அதிசயமான ஒரு பெரிய மாயச் சதுரம்! பிரமிக்க வைக்கும் 16 சூப்பர் மாயச் சதுரங்கள்! கணிதப் புதிர்கள்! முன் கூட்டியே ஒரு கூட்டல் எண்ணை மாஜிக் போல உங்களால் சொல்ல முடியும்! காணாமல் போன இலக்கத்தைக் கண்டுபிடிக்கலாம். அறிவியல் புதிர்கள்! அல்பேக்கரின் ‘நியூமரோ’’ அனைவரும் படிக்க வேண்டிய இந்த நூல் பரிசளிப்பிற்கு உகந்ததும் கூட!
Release date
Ebook: 7 March 2025
Tags
English
India