Step into an infinite world of stories
Personal Development
கடந்த 13 ஆண்டுகளில், 1200-க்கும் அதிகமான பயிற்சி நிகழ்வுகளை நடத்தியிருக்கும் எனக்கு, அவ்வப்போதுதான், பேசுபொருளை நானே நிர்ணயிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
அப்படியொரு வாய்ப்பு, சமீபத்தில், மதுரை “ஜம் ஜம் ஸ்வீட்ஸ்” நிறுவனத்தாரின், ஒரு கொண்டாட்ட நிகழ்வில் கிடைத்தது. புதுமையான தலைப்பு தந்தேன்...! அறிந்தவர்கள் அனைவரையும் ஈர்த்தது; அதனால், அக்கருத்தை விரித்து, நூலாக்க முனைந்தேன். அது, இப்போது உங்கள் கைகளில்...!
தமிழில் சுயமுன்னேற்ற நூல்களின் மீது, எனக்கு ஆர்வத்தை உண்டாக்கிய அனைவருக்கும்... குறிப்பாக…, சுவாமி சுகபோதானந்தா, திரு. பா. ராகவன், திரு. சோம. வள்ளியப்பன், திரு. வெ. இறையன்பு இ.ஆ.ப., திரு. பத்ரி சேஷாத்ரி, திரு. என். சொக்கன் மற்றும் திரு. சிபி.கே. சாலமன் ஆகியோருக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்...!
திரு. “வெற்றி விடியல்” சீனிவாசன் அவர்கள், அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி, தொழில் ஆலோசனை வழங்கும் பிரபலம். இவர் வழிகாட்டும் ஒரு முகநூல் பக்கத்தை, 8 லட்சத்திற்கும் அதிகமான சிறுதொழில் முனைவோர் பின்பற்றுகிறார்கள். மனமுவந்து, சரியான நேரத்தில் அணிந்துரை தந்த, அவருக்கு என் நன்றிகள் கோடி...! புத்தக உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும், என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலில், அதிகமான உதாரணமாக, “கோடு” இடம்பெற்றுள்ளது. நான் கோடு போட்டால், நீங்கள் “ரோடு” போடுவீர்கள்...! நான் பாதை காட்டியிருக்கிறேன்; பயணித்து முன்னேறுங்கள்...! வாழ்த்துகளும், நன்றிகளும்...!
Release date
Ebook: 7 July 2022
Tags
English
India