Step into an infinite world of stories
சோம வள்ளியப்பன் சிறுகதையில் ஆழமும்.அழுத்தமும் இருக்கிறது.ஓர் எழுத்தாளனை பாதித்த விஷயம் அதே அளவில் படித்தவனையும் பாதிக்கவேண்டும்.பதிக்கும்படி எழுதினால் தான் எழுத்து.
சோம வள்ளியப்பனின் எழுத்துக்கள் பாதிக்கின்றன.தொகுதியில் உறுத்தலின்றி,கதாசிரியனின் குறுக்கீடு இன்றி,மொசைக் தரையில் விழுந்த நைலான் துணி மாதிரி மனதில் நழுவிக்கொண்டு ஓடும் சிறுகதைகள்.
மனித மேன்மை,மனித நேயம்,இவற்றினூடே மனித மனதின் அல்பத்தனம் என ஒவ்வொன்றையும் தொட்டிருக்கிறார் சோம வள்ளியப்பன்.
எளிமைதான் அழகு என்பார்கள்.அந்த அழகு எல்லாக் கதைகளிலும் கொட்டிக்கிடக்கிறது.ஆர்பாட்டமில்லாத நடையும் சோம வள்ளியப்பனுக்கு பிடிப்பட்டிருக்கிறது.இவர் இயல்பைப் போலவே கலகலப்பும் கிண்டலும் கதைகளில் கலந்திருக்கிறது.
புத்தகத்தை பிரித்தது முதல் வாசித்து முடிக்கும் வரை அதன் ஆளுமையில் சிக்கிக்கொள்ள வைப்பது எழுத்தின் வெற்றி
Release date
Ebook: 15 February 2022
English
India