Step into an infinite world of stories
Short stories
சிறுகதைகளுக்கென்று ஏதேனும் இலக்கணம் இருக்கிறதா? காலங்காலமாய் இப்படி ஒரு கேள்வி உண்டு. ரொம்ப சுலபமான பதில், பக்க அளவு - 100 பக்கம் எழுதினால் அது சிறுகதை இல்லை. வேற்று மொழியில் இப்படி ஒரு சிறுகதை இருக்கிறது. விதிவிலக்குகளைத் தள்ளுவோம்.
வாசிக்க ஆரம்பித்தால் ஈர்க்க வேண்டும். கடைசி வரை சுவாரசியம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லாக் கதைகளுக்கும் அவசியமில்லை என்றாலும் முடிவில் சின்னதாகவாவது ஒரு ட்விஸ்ட் காத்திருக்க வேண்டும். ஊடே ஊடே சபாஷ் சொல்ல வைக்கிற சொல்லாடல் ஒன்று இயல்பாக இருந்துவிட்டால் அந்தக் கதைக்கு நட்சத்திர அந்தஸ்து கிட்டிவிடும் சுலபமாய். இந்தத் தொகுப்பில் பெரும்பாலும் அளவில் சிறிய கதைகள். எங்கே அவள்? தவிர. அதனால் சுவை குறையவில்லை. ஒவ்வொன்றிலும் கதைக்களனைக் காட்சிப்படுத்துவதும், சூழலுக்கு இழுத்துப் போகும் எழுத்தும், பிரச்சாரமில்லாத மெசெஜும் வாசிப்பை இனிமை ஆக்குகின்றன.
Release date
Ebook: 1 June 2022
English
India