Step into an infinite world of stories
1
Religion & Spirituality
1975 ல் ஓஷோ அறிமுகம் – சிறு வயதிலேயே தேடல் துவங்கிவிட்டது. எல்லோரையும் போலவே எல்லா திசைகளிலும் தேடினேன். எனது தனிமையாய் இருந்து ரசித்த அனுபவங்கள் என்னை ஆன்மீகம் பக்கம் ஈர்த்தது. என்னை மிகத் தெளிவாக எனக்கு தெரிந்ததால் – என் குழப்பம், என் பயம், என் ஆசைகள், என் தந்திரங்கள், என் திறமை, என் இயலாமை – இப்படித் தெரிந்ததால், அதோடு இறப்பை நன்கு நான் அறிந்ததால், இவற்றிலிருந்து இன்பத்தைக் காட்டும் ஆன்மீகம் என்னை ஈர்த்தது. ஆக தனிமையும், வெறுமையும், வறுமையும் எனது தேடலை ஆழமான தேடலாக்கியது.
இது கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரரில் ஆரம்பித்து, இரமணரிடம் வந்து, பிறகு சிவானந்த பரமஹம்சரின் உபதேசம் பெற்று ஓஷோவில் முடிந்தது. நடுவில் காந்தீயம், கம்யூனிசம், நக்ஸல், வானவியல், விஞ்ஞானம், ஆர்தர் கோய்ஸ்லர், பெர்ணான்ட் ரஸ்ஸல் போன்ற ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், எழுத்து, கவிதை, வங்கி வேலை, காதல்கள் எல்லாவற்றிலும் நுழைந்து திரும்பினேன்.
Release date
Ebook: 15 February 2022
English
India