Step into an infinite world of stories
Religion & Spirituality
காலமெல்லாம் என்னைத் தன் கொத்தடிமையாகக் கொண்டிருக்கும் பச்சைப்புடவைக்காரியை - மதுரை அரசாளும் மீனாட்சியைப் பல முறை சந்தித்தேன். மனித இனத்தின் வலிகளையும் வேதனைகளையும் அவளிடம் பகிர்ந்துகொண்டேன். அவள் தந்த வழிகாட்டுதலையும் ஆறுதல் வார்த்தைகளையும் எழுதினேன். வைகைப்பாலத்தில் படுத்துக்கிடந்த பிச்சைக்காரன், உறவுக்காரப் பெண் வளர்த்து வந்த தெரு நாய், கால்கள் விளங்காமல் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்ட ஒரு பெண் பெற்ற அருட்கொடை என்று பல பரிமாணங்களில் தன் அன்பை எனக்குப் புரியவைத்தாள் பராசக்தி. முத்தாய்ப்பாகச் சாகும் நிலையில் இருந்த ஒரு எழுத்தாளரின் மனதில் என்னைப் புகவைத்துக் காலகாலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஆன்மீக உண்மைகளை எளிய நடையில் விளக்கினாள். ஏழு உலகிற்கும் சொந்தக்காரி. - 'நிஜமாகவே அவளைப் பார்த்தீர்களா? நீங்கள் எழுதுவதெல்லாம் உண்மையா?' என்பது போன்ற கேள்விகளில் தொடங்கி, 'எதற்கும் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்த்துவிடுங்களேன்' என்ற போலிக் கரிசனம்வரை ஆயிரக்கணக்கான விமர்சனங்கள். | பச்சைப்புடவைக்காரியும் வலியும் ஒன்று. நாம் யாருமே வலியைப் பார்த்ததில்லை. ஆனால் வலியை உணர்வதுபோல் நாம் பார்க்கும் காட்சிகளை அழுத்தமாக உணரமுடிவதில்லை. வலியை உணராதவர்களுக்கு என்னதான் கரடியாய்க் கத்தினாலும் வலியைப் புரியவைக்க முடியாது. உங்களால் வலியை உணர முடியுமென்றால் நான் அவளைப் பார்த்தது, பேசியது எல்லாம் உண்மை . இது உங்களுக்காகவே எழுதப்பட்ட புத்தகம். 'வலின்னா என்ன?' என்று நீங்கள் கேட்டால்... இந்தப் புத்தகம் உங்களுக்கு அல்ல.
Release date
Ebook: 19 December 2022
English
India