Step into an infinite world of stories
Fiction
பெரிய நகரமுமில்லாத குக்கிராமமுமில்லாத மத்தியமான ஊரில் சந்தானம் மற்றும் கிட்டு ஆகிய இரு குடும்பங்கள் அன்னியோன்னயமாகப் பழகுகின்றது. நண்பரின் பெண் தப்பான வழியில் போகிறாள் என்று சந்தேகப்படுகிறார் சந்தானம். அதற்கு தகுந்தாற்போல சில சம்பவங்கள் அவர் கண் முன்னால் நடக்கிறது. கடைசியில் அவரது சந்தேகம் சரிதானா? அந்தப் பெண் அவர் நினைத்ததுபோல எதாவது கசமுசாவில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டுவிட்டாளா? என்பதைக் காட்சிகள் போல நகர்த்தப்படும் புனைவு இது. குறும்படம் குறுநாவல் போன்ற தினுசாக இல்லாமல் இதை ஒரு நெடுங்கதை எனலாம். மெட்ரோ ரயிலுக்கு, ஷேர் ஆட்டோ நிரம்புவதற்கு, சூப்பர்மார்க்கெட் கவுன்டர் நிரம்பி வழியும் போது, எங்காவது விஸிட்டர் நாற்காலியில் வெட்டியான வெயிட்டிங் தருணம் என்று பத்து பதினைந்து நிமிஷ காத்திருப்பில் இக்கதையை வாசித்துவிடலாம். இது குடும்பக் கதையா? இல்லை. காதல் கதையா? அதுவும் இல்லை. சரி. எதாவது கொலையைத் துப்புத் துலக்கும் மர்மக் கதையா? ஊஹும். இவ்வளவு கேள்விகள் கேட்கும் நேரத்தில் இந்தக் கதையைப் படித்துமுடித்துவிடலாம்.
Release date
Ebook: 1 June 2022
English
India