Step into an infinite world of stories
2
Religion & Spirituality
அன்புள்ள வாசகரே,
இந்த இனிய தேசம் அற்புதமானது என்பதை என் பயணங்கள் எனக்குப் புரிய வைத்திருக்கின்றன. அழகிய மலைகள், நதிகள், காடுகள், பாலைவனங்கள், கடல்கள், தீவுகள் போன்ற எழில் கொஞ்சும் இடங்களும், நிகழ்ந்த சரித்திரத்தின் சான்றாக நிற்கும் பழைய நகரங்கள், கிராமங்கள், புதிதாக எழுந்திருக்கும் நகரங்கள், வழிபாட்டுத் தலங்கள், நூறு மொழிகள், ஆயிரம் உணவு வகைகள், பல்வேறுபட்ட சமூக வாழ்க்கை முறைகளுடன் வாழ்ந்தாலும், தேசத்தை நேசிப்பதில் ஒன்றாக நிற்கும் மக்கள் இப்படி அனைத்தும் பரவிக் கிடக்கும் இந்தத் தேசத்தில் சொந்த நாட்டை முழுவதுமாக பார்க்காமல் வெளிநாடுகளில் பயணம் செய்தவர்கள் அதிகம். 2000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள சரித்திரத்தைச் செல்லுமிடங்கள் பல இருக்கும் இந்த நாட்டில் 300 வயதைக்கூட அடையாத அமெரிக்காவைப் பற்றி எழுதியவர்கள் அதிகம்.
பெற்றோர்களுடன் பயணித்த பல பயணங்களினால் எழுந்து தொடர்ந்த தணியாத ஆர்வம், சார்ந்திருந்த வங்கித் தொழில் வழங்கிய வாய்ப்பு, என்னைப் போலவே பயணங்களை நேசிக்கும் என் மனைவியை அடைந்த நல்வாய்ப்பு ஆகியவைகள் எல்லாம் இந்தத் தேசத்தின் பல எல்லைகள் வரை என்னை அழைத்துச் சென்றிருக்கிறது. பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த இந்தப் பயணங்களில் மனதாலும் பார்த்து மயங்கிய இடங்கள் பல.
எனது பல உள்நாட்டு, வெளிநாட்டு இனிய பயணங்களில் பல இடங்களில் தங்கியது உண்டு. அவற்றில் மனதில் தங்கி விட்ட ஓர் இடம் லடாக். ஜம்மு-காஷ்மீர் சில முறை சென்றிருந்தாலும், நெடு நாளைய கனவான லடாக் பயணம் அண்மையில்தான் நனவாயிற்று. அருமையான அனுபவம். அதை என் பார்வையில் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
Release date
Ebook: 11 January 2021
English
India