Step into an infinite world of stories
Religion & Spirituality
வினா வெண்பா என்ற இந்த நூல், சாத்திர நூல்களில் ஒன்பதாவது இடத்தில் வைக்கப் பெற்றுள்ளது. இந்நூல் சைவ சித்தாந்த அடிப்படை வாய்ந்த வினாக்களை வெண்பா வடிவில் கேட்பதாக அமைக்கப் பெற்றுள்ளது.
உமாபதி சிவாசாரியார் தன் ஆசிரியரான மறைஞான சம்பந்தரிடம் வினாக்களை வினவும் போக்கில் அமைந்தது இந்நூலாகும். இவ்வினாக்கள், சைவ சித்தாந்தக் கொள்கையை அறிய முற்படும்போது ஏற்படும் அடிப்படைக் கேள்விகள் ஆகும். இதற்கான பதில் இந்நூலில் தரப்படவில்லை என்றாலும், இதற்கு உரைகண்டவர்கள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லிச் செல்வதன் வாயிலாக இந்நூல் முழுமை பெற்றுவிடுகின்றது.
இந்நூல் பதிமூன்று வெண்பாக்களால் ஆன நூலாகும். முதல் பன்னிரண்டு வெண்பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வினாவினைக் கொண்டுள்ளது. பதிமூன்றாவது வெண்பா நூற்பயனை எடுத்துரைக்கின்றது.
Release date
Ebook: 3 August 2020
English
India