Step into an infinite world of stories
இனிய நட்புக்கு,
நலம் தானே? நாவலுக்குள் செல்வதற்கு முன் ஒரு சில வார்த்தைகள் சொல்லி விடுகிறேனே. 'ராதா மாதவம்—'ராதா, கிருஷ்ணன் இருவரது சிருங்கார நிலையைக் கூறும் சொல் இது. ராதையின் மாதவம் கிருஷ்ணன். என் நாவலின் நாயகி ராதாவும் மாதவனுக்காக தவமிருக்கிறாள். அவள் காதல் வென்றதா? மாதவம் நிறை வேறியதா...? அது ஈடேறுவதற்குள் எத்தனை சிக்கல்...! அவை சாதாரண சிக்கலல்ல. வித்யாசமான சிக்கல். மனிதனின் கணக்குகளுக்கும், தெய்வத்தின் கணக்குகளுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் தான் இதன் சுவாரசியமான கரு. யார் கணக்கு சரி? யார் கணக்கு தவறு? யார் கணக்கை யார் மாற்றினார்கள்? இதற்கு பதிலை வாசகர்களே யோசிக்கும் வகையில் இந்நாவலை எழுதியுள்ளேன். கோணங்கள் மாறலாம். நீங்கள் எந்தக் கோணத்தில் நின்று பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் பதில்கள் அமையும். அவ்வாறு யோசிக்கும் நிலையில் வாசகனுக்கும், கதாபாத்திரங்களுக்கும் இடையிலிருந்து நாசூக்காய் விலகி விடுவது தான் கதாசிரியருக்கு அழகு. எனவே நானும் விலகிக் கொள்கிறேன். உங்கள் உணர்வுகளை மனம் விட்டு என்னோடு பகிர்ந்து கொள்ள ஒரு தடையும் இல்லை.
அன்புடன், வித்யா சுப்ரமணியம்
Release date
Ebook: 3 January 2020
English
India