Step into an infinite world of stories
அன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம். நலம்தானே....
வாழ்க்கையில் ‘சவால்களைச் சந்திப்பதில் விருப்பமுள்ளவன் நான் ‘முடியாது’ இதோடு, உன் கதை முடிந்தது’ - என்றும் யாராவது சொன்னால் போதும். துவண்டு கிடக்கும் என் மனம் ஆர்ப்பரித்துக் கிளம்பும்.
'சகாராவில் பூத்த ரோஜா' - கதாநாயகி சாருமதி கூட அப்படித்தான். சாதுவானப் பெண், ஏதோ ஓர் அதிருஷ்டத்தில் - திரையுலகில் பாடகியாய் வலம் வருபவள். 'தான் உண்டு; வேலையுண்டு' என்றிருப்பவள். பத்திரிகையாளர்களின் கிசுகிசுக்களுக்கு எல்லாம் ஆளாகாதவள்… ஆனால் அவள் தங்கை இந்துவின் மீது அவள் கொண்டிருந்த அளவிட முடியாதப் பாசம்... சவாலை அவள் சந்திக்கும்படி வைத்தது. அவள் நிலையில் உள்ள எந்தப் பெண்ணும் இதைத்தான் செய்வாள். செய்யவும் வேண்டும்!
படியுங்கள். மறுபடி அடுத்த நாவலில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு அன்புடன், அனுராதா ரமணன்...
Release date
Ebook: 3 January 2020
English
India