Step into an infinite world of stories
Fiction
மனித மன உணர்வுகளில் முக்கியமான ஒன்று சந்தோஷம். சந்தோஷ உணர்வை உருவாக்குவதில், நகைச்சுவைக்கு முக்கிய பங்கு உண்டு. சிரிப்பு என்பது சந்தோஷத்தின் ஒரு வெளிப்பாடு. அந்த சிரிப்புக்கான வரவேற்பு வளையம்தான் ‘ஜோக்ஸ்’ எனப்படும் நகைச்சுவை துணுக்குகளாகும்.
நம் பேச்சாலும், செய்கையாலும், மற்றவர்களை சிரிக்க வைப்பதை ஒரு சமூக சேவையாக கருதலாம். சிரிப்பு, இறுக்கமான சூழ்நிலைகளையும், மென்மையாக மாற்றும் வல்லமை படைத்தது. மற்றவர் மனம் நோகாமல் சிரிக்க வைப்பதில்தான், நகைச்சுவையின் வெற்றி அடங்கி இருக்கிறது. படித்தவுடன் குபீர் சிரிப்பை தூண்டுவது ஒன்றுதான் ஜோக்கிற்கான ஒரே இலக்கணமாகும். படிப்பவர்களை சிரிக்க வைக்கும் ஜோக்குகளுக்கு வாசகர்கள் மனதில் எப்பொழுதுமே பிரத்தியேக இடம் உண்டு. ஆனந்த விகடன். குமுதம், குங்குமம், கல்கி, தினமலர் போன்ற பிரபல இதழ்களில் இடம்பெற்ற என்னுடைய ஜோக் படைப்புகளை புத்தகமாக தொகுத்து வழங்கி இருக்கிறேன்.
Release date
Ebook: 7 July 2023
English
India