Step into an infinite world of stories
Religion & Spirituality
தக்கலை பீர் முகம்மது அப்பா காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர். அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறைநேசச் செல்வர். திருக்குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். இவருடைய பாடல்கள் யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எளிமையானவை. பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது நபிப் பெருமகனாரின் திருப்பெயர்.
இவரது நூல்கள்
திருமெய்ஞானச் சர நூல், ஞான மலை வளம், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞான மணி மாலை, ஞானப் புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப்பூட்டு, ஞானக்குறம், ஞான ஆனந்தகளிப்பு, ஞான நடனம், ஞான மூச்சுடர் பதிகங்கள், ஞான விகட சமர்த்து, ஞானத் திறவு கோல், ஞான தித்தி
இவரது நூல்களில் ஞானப்பால், ஞானப்பூட்டு, ஞான ரத்தினக் குறவஞ்சி ஆகியவற்றோடு கலீல் அவ்ன் மெளலானா அவர்களின் தாகிபிரபம் நூலையும் இந்த ஒலி நூலில் கேட்கலாம். இந்த நூல்களை எனக்குத் தந்து உதவியவர் ஞானவெட்டியான் அவர்கள்.
© 2022 RamaniAudioBooks (Audiobook): 9781669683070
Release date
Audiobook: 25 March 2022
English
India