Step into an infinite world of stories
இது காதல் கதை என்று சொல்வதைவிட, காதலைப் பற்றின கதை என்பதே பொருத்தமாக இருக்கும். இந்தக் கதை எழுதியதன் மூலம், வாசகர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதன் மூலம்... ஒன்று உறுதியானது. அது...
வயது, அந்தஸ்து, தரம், பதவி - என்று எந்த வித்தியாசமும் இன்றி, பொது மக்களோடு ஐக்கியமாகியுள்ள விஷயங்களில் முக்கியமானது 'காதல்'.
காதலித்தல் என்பது செக்ஷன் 302க்கு உரித்தான குற்றம் போல் கருதப்பட்ட காலம் எல்லாம் மலையேறி... இன்றைக்கு தினம் ஒரு காதல் செய்தி படிக்கிறோம்... பேசுகிறோம்.. கேள்விப்படுகிறோம்.
நம்பிக்கை உண்டோ இல்லையோ - ஆத்திகவாதி, நாத்திகவாதி இருவருமே கடவுளைப் பற்றிப் பேசுதல் போல்... ஆதரிப்பவரும், எதிர்ப்பவரும் - காதலைப் பற்றிப் பேசுகிறார்கள் (இதனால்தான் Love is God என்றார்களோ!)
காதல் - உணர்வுப் பூர்வமான உன்னத விஷயம். வாழ்க்கை யதார்த்தப் பூர்வமான கரடுமுரடான விஷயம். வயிற்றுப் பசிக்கு வழி அமைத்துக் கொள்ளாமல் உள்ளப் பசிக்கு அலையும் காதல்கள் மேல் எனக்குக் கவலை கலந்த கோபம் வரும். 'ஓடிப்போவது' ஒரு காதலின் க்ளைமாக்ஸாக இருக்கலாம். ஆனால், சவால்விடும் வாழ்க்கைக்கு அதுதான் சரியான ஆரம்பம். அதையே என் கதைக்கும் ஆரம்பமாக்கத் தீர்மானித்தேன்.
- பட்டுக்கோட்டை பிரபாகர்.
Release date
Ebook: 13 September 2022
English
India