Step into an infinite world of stories
3.5
Personal Development
நீங்கள் செய்யும் வியாபாரம் எதுவானாலும் அதில் வெற்றி பெற...
இந்தியாவில் தற்சமயம் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் அளவு மொத்த மக்கள் தொகையில் சுமார், 52%. மேனுபேக்கசரிங் எனப்படும் உற்பத்தித்துறையில் ஈடுபட்டிருப்போர் அளவு 14%. ஏனைய 34% மக்கள் சர்விஸ் செக்டார் எனப்படும் சேவைத்துறையில்தான் இருக்கிறார்கள்... சர்விஸ் செக்டர் என்றால் சேவைகள், சலூன், ஓட்டல், சலவை நிலையம், வாடகை கார்கள், பள்ளி கல்லூரிகள், வங்கிகள், கடைகள், மால்கள், திரைப்படக்கூடங்கள், தொலைக்காட்சி, டெலிபோன், மொபைல், ஜெராக்ஸ், எப் எம் ரேடியோக்கள், கார் வண்டிகள் ரிப்பேர் நிலையங்கள், பேருந்து, ரயில்வே, ஆட்டோ, டேக்ஸி, தகவல் தொழில் நுட்பம், த.தொ.நு. சார்ந்த வேலைகள், பத்திரிக்கை, மளிகை, காய்கறி, துணி நகைக் கடைகள், பெட்ரோல் பங்க் என்று விவசாயமும் உற்பத்தியும் அல்லாத மற்ற அனைத்துமே சர்விஸ் செக்டர்தான்.
எண்ணிக்கையில் வேண்டுமானால் விவசாயம் செய்வோர் நூற்றுக்கு 52 பேர் என்று அதிகமாக இருக்கலாம். ஆனால் அவ்வளவு பேர் சேர்ந்து உருவாக்கும் பொருள்மதிப்பு (ஜி.டி.பி), 2001ம் ஆண்டு கணக்குப்படி, நூறு ரூபாய்க்கு வெறும் 14 ரூ 60 காசுதான். உற்பத்தித்துறை உருவாக்கும் மதிப்பு ஜி.டி.பி யில் 28.6%. சர்விஸ் செக்ட்டர்தான் 57.2% பொருளாதார மதிப்பை உருவாக்குகிறது. குறைந்த எண்ணிகையில் இருக்கும் மனிதர்கள் உருவாக்கும் பெருமதிப்பிலான சேவைகள்.
பெரிய நிறுவனங்களால் அல்ல, லட்சக்கணக்கான சிறு தொழில்கள், வியாபாரம் போன்றவற்றால்தான் அமெரிக்கா முன்னேறிய நாடாகியது என்பார்கள். காரணம், பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியாது. தவிர, வேலைக்கு போக விருப்பம் இல்லாதவர்கள், சொந்தமாக தொழில் வியாபாரம் செய்ய விரும்புகிறவர்கள் எல்லாக் காலக்கட்டங்களிலுமே கணிசமான எண்ணிக்கைகளில் இருக்கிறார்கள்.
உலக நாடுகளின் சராசரி என்று பார்த்தால், 100 ரூபாய்க்கு 68 ரூபாய், சர்விஸ் செக்டரில் இருந்துதான் வருகிறது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற முன்னேறிய நாடுகளின் ஜி.டி.பியில் சர்விஸ் செக்டர் பங்கு, நூற்றுக்கு 78 ரூபாய். இந்தியாவில் நூற்றுக்கு 57 தான். அப்படியென்றால், இந்த வகையில் இந்தியா எவ்வளவோ முன்னேற இருக்கிறது.
அதேபோல, சிறுதொழில்கள் வியாபாரம் (SMEs) போன்றவை. தற்சமயம் நாட்டின் மொத்த தொழிற்சாலை உற்பத்தியில் 45% மும், மொத்த ஏற்றுமதியில் 40% மும் சிறு மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களில் இருந்துதான் வருகிறது. இவற்றில் மொத்தம் 7 கோடி பேர் வேலை செய்கிறார்கள். அவை உற்பத்தித்துறையோ, சர்விஸ் செக்ட்டாரோ, சிறுதொழில்கள் வியாபாரம் போன்றவை வரவிருக்கின்ற காலகட்டத்தில் நன்கு வளர இருக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கான புத்தகம்தான் இது. வியாபாரம் தொடங்குபவர்களுக்காக, வியாபாரம் செய்பவர்களுக்காக; சொந்தத் தொழில் செய்பவர்களுக்காக; அவர்கள் மேலும் மேலும் வெற்றி பெறுவதற்காக எழுதப்பட்ட புத்தகம்தான் இது.
திரைப்படங்களுக்கு பாடல் உருவாக்கும் போது, இசையமைப்பாளர்கள் தொடக்கத்தில் மெட்டுக்கு ஏற்ப, டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டுப் பார்த்துக் கொள்வார்களே அப்படி இந்த புத்தகம் எழுத ஆரம்பித்தபோது நான் இந்தப் புத்தகத்திற்கு வைத்துக்கொண்ட தலைப்பு, 'நீங்கள் செய்யும் வியாபாரம் எதுவானாலும் அதில் வெற்றி பெறுவது எப்படி?' என்பது. ஆக, அதுதான் உள்ளடக்கம். அதற்கான தகவல்கள்தான் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா வியாபாரங்களுக்கும் தொழில்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான தகவல்கள்.
வியாபாரம் என்பது ஒரு கடல். அதனைப் பற்றி ஒரு புத்தகத்திலேயே, முழுவதும் சொல்லிவிட முடியாது. ஒரு வியாபாரி, தொழில் முனைவோர் தெரிந்து கொள்ள சில அடிப்படையான விஷயங்களை உதாரணங்களுடன் கொடுப்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.
ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் எந்த அளவிற்கு பொருளாதார சீர்திருத்தங்கள் (ரீபார்ம்ஸ்) செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்று கடுமையாக பாராளுமன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும் ஒரு மதிய வேளையில்,
வாழ்த்துகளுடன்,
சோம. வள்ளியப்பன்
Release date
Ebook: 15 September 2020
Tags
English
India