Step into an infinite world of stories
"மாரத வீரர் மலிந்த நன்னாடு” என்ற பாரதியார் கவிதை வரிகளைப் படித்துப் பெருமை கொள்வேன் நான். நல்ல வீரனொருவனைப் பற்றிய நவீனம் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது சரித்திர ஆராய்ச்சிப் புத்தகங்களையும் தமிழ் பாடல்கள் பலவற்றையும், கல்வெட்டுச் சாசனங்களையும் நான் படித்தேன். மாரத வீரர் மலிந்திருப்பது அப்போது தெரிய வந்ததால் பாரதியாரின் வரிகளிலுள்ள உண்மை புரிந்தது.
புருஷோத்தமனும் அசோகனும் சமுத்திரகுப்தனும் ஹர்ஷரும் சிவாஜியும் மாவீரர்கள் என நாம் படித்திருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் பிறந்துத் தமிழகத்தைக் காப்பாற்றப் போரிட்ட வீரர்கள் பலரைப் பற்றி இன்னும் நூல் வடிவில் வராததால் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விட்டது.
மாமல்லரும், பரஞ்சோதியும், உதய சந்திரனும், கருணாகரத் தொண்டைமானும், வந்தியத் தேவனும், ராஜராஜனும் வரலாற்றுப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு பெருஞ் சரித்திர நவீனம் எழுதலாம். வாழ்வின் விளக்கமே காதலும் வீரமும் தானே! வீரர் வாழ்வில் இரண்டிற்கும் இடமில்லாதிருக்குமா! இரண்டும் சேர்ந்து விட்டால் கதைச்சுவைக்கு கேட்க வேண்டுமா?
நவீனம் ஒன்று எழுத வரலாற்றுப் பின்னணியை நான் தேடி ஆராய்ந்தபோது 'உதயசந்திரன்' என் கண்முன்னர் கம்பீரமாக வந்து நின்றான். அவனது வீர தீர சாகசங்களைக் கொண்டு கதை புனையத் தொடங்கினேன்.
சரித்திரக் கதை எழுதுவதிலுள்ள கஷ்டங்களைப் பற்றி நானே பெருமை கொள்ளக்கூடாது. அத்துறையில் புகுபவர் அறிவர். வரலாற்று உண்மைகளுக்கு மாறுபடாமல், அக்காலச் சூழ்நிலையினின்று வழுவாமல், சொந்தக் கற்பனைகளை அவற்றுடன் ஒட்டவைக்கும்போது மிக்க கவனத்துடன் இருக்க வேண்டும்.
நாவல் படிக்கச் சுவையாயிருந்தாலும் இல்லாவிடினும் அந்நாவலின் மூலம் தவறான சான்றுகள் மக்கள் மனத்தில் படுமாறு செய்துவிடக் கூடாது. இவற்றை மனத்தில் கொண்டு நான் எழுதிய முதல் நாவல் ‘உதயசந்திரன்'
- விக்கிரமன்
Release date
Ebook: 18 May 2020
English
India