Step into an infinite world of stories
Religion & Spirituality
தெய்வ மொழியான தமிழின் தெய்வீக ஆற்றலைப் புலப்படுத்த அவதரித்த அருளாளர் அருணகிரிநாதர். தமிழின் மூலம் எளிதாக முருகனை அடைய வழி வகுத்தவர் அவர். தமிழுக்குப் புதிய சந்த வகையைக் காட்ட முருகனே அருள் புரிய அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை உலகிற்குத் தந்தார். எந்தத் திருப்புகழை ஓதினால் என்ன பலன் கிடைக்கும் என்பதற்கு ஒரு வழிகாட்டி, மந்திரத் திருப்புகழ், வீர ஜெயத்திருப்புகழ், ஒரு திருப்புகழில் மறைந்திருக்கும் இன்னொரு திருப்புகழ், முருகனே திருஞானசம்பந்தர், கலாப மயில் பெருமை ஆகிய சுவையான விவரங்களோடு அருணகிரிநாதர் தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்திய பாடல்களின் தொகுப்பும் இந்த நூலில் உள்ளது. அனைத்து வேதம், இதிஹாஸம், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் சாரமாகத் திகழ்வது தமிழில் அமைந்துள்ள திருப்புகழ். அதன் பெருமையையும் மகிமையையும் அறிய இந்த நூல் அன்பர்களுக்கு ஒரு சிறந்த வரபிரசாதம்.
Release date
Ebook: 14 February 2023
English
India
