Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
8 Ratings

4.4

Language
Tamil
Format
Category

Personal Development

நீ எதை தேடிக் கொண்டிருக்கிறாயோ, அது ஏற்கெனவே உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. அப்படி தேடிக் கொண்டிருந்த பல புத்தகங்களைப் பற்றிய உற்ற தோழனைப் போல விவரிக்கும் ஓர் அன்புப் புத்தகத்தைத்தான் நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள்.

ஒரு நல்ல நூல் சிறந்த நண்பன் என்பார்கள். வெற்றிக்கு 16 என்ற இந்தப் புத்தகத்தின் மூலம் உங்களுக்கு பதினாறு நண்பர்கள் கிடைக்கப் போகிறார்கள். அதாவது 16 உலகப் புகழ் பெற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களைப் படித்த அனுபவம் கிடைக்கப் போகிறது. மேலும், பல காரணங்களால் படிக்கத் தவறிய அல்லது முழுமையாக படிக்காமல் விட்ட புத்தகங்களை மீண்டும் படிக்கும் ஆவலை என் எழுத்து தூண்டும் என நம்புகிறேன். ஆங்கிலத்தில் பல நூறு சுயமுன்னேற்ற நூல்கள் உள்ளன. உலகளவில் நாளும் பொழுதும் வந்து கொண்டும் இருக்கின்றன. இவற்றில் மிகப் பெரிய தாக்கத்தையும், விற்பனையில் புரட்சியையும், பலகோடி வாசகர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திய சுயமுன்னேற்றப் புத்தகங்களின் பட்டியலை உருவாக்கி, அவற்றின் உள்ளடக்கத்தை இரண்டே பக்கங்களில் எழுதுவது சவாலான பணிதான். அதனை சரியாகவே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

உலகில் மாற்றங்களை விதைத்த அந்த அரிய நூல்களைப் பற்றி வாரந்தோறும் எழுதுவதற்கான வாய்ப்பு முன்னணி பத்திரிகையான புதிய தலைமுறை வார இதழ் மூலமாக கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் பல ஆயிரம் வாசகர்கள் பயனடைந்த அந்தத் தொடர்தான் உங்கள் கைகளில் ஒரு தொகுப்பாக தவழ்கிறது. புதிய தலைமுறையில் எழுத வாய்ப்பளித்த மதிப்பிற்குரிய ஆசிரியர் எம்.பி. உதயசூரியன், துணை ஆசிரியர் தளவாய்சுந்தரம் மற்றும் ஆசிரியர் குழுவுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒவ்வொரு வாரமும் எழுத பல ஆலோசனைகளையும், உற்சாகமும் வழங்கிய அன்பான மனிதர் சுந்தரபுத்தன், நூலாக்கம் செய்த நண்பர் சூரிய சந்திரன். அட்டை வடிவமைப்பு செய்த அண்ணன் ராஜா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் அதிரடி திருப்பங்களை உருவாக்கி, பெரும் உயரங்களைத் தொடவைத்த மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் புத்தகங்களைப் பற்றிய என் எழுத்தை வாசிக்கப் போகும் வாசகர்களாகிய உங்களுக்கு என் வாழ்த்துகள்.

பேரன்புடன்

உதயசான்றோன்

Release date

Ebook: 6 April 2020

Others also enjoyed ...