Step into an infinite world of stories
Personal Development
வெற்றிகரமான மனிதர் என்று ஒருவரைச் சொல்லும் போது அவர் ஒரு பெரிய பணக்காரர் என்பதையே பொதுவாக அது குறிக்கிறது. நல்ல பதவி, உயர்ந்த அந்தஸ்து, மற்றவர்களால் மதிக்கப்படும் அதிகாரம் போன்றவற்றைக் கொண்டுள்ளவர்கள், வெற்றியாளர்கள் எனவும் சொல்லப்படுகிறது.
ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுடன், தேவையான அளவு செல்வத்தைக் கொண்டு குடும்பத்தை செவ்வனே நடத்தி சமுதாய மேன்மையை எவர் ஒருவர் மேற்கொள்கிறாரோ, எவர் மனதில் ஆத்ம திருப்தி இருக்கிறதோ அவர் வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்க்கை எனலாம்.
தனது கடுமையான உழைப்பால் உயர்ந்து வெற்றிக்கு வழி காட்டிய சாதனையாளர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலரைப் பற்றி மாலைமலரில் 2024-ம் ஆண்டு வாரந்தோறும் வெளி வந்த கட்டுரைகளின் நான்காம் தொகுதி இது. இந்த நான்காம் பாகத்தில் லரிஸா லடிநினா, சார்லி சாப்ளின், லதா மங்கேஷ்கர், மகேஷ் யோகி, மேடம் க்யூரி, ஜகதீஷ் சந்திர போஸ், எலினார் ரூஸ்வெல்ட், ரத்தன் டாட்டா, அலெக்ஸிஸ் காரல், சாலி ரைட் ஆகிய பத்து வெற்றியாளர்களைப் பற்றிய கட்டுரைகள் இடம் பெறுகின்றன. வெற்றி பெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. பரிசாகக் கொடுக்க உகந்த நூலும் கூட.
Release date
Ebook: 15 September 2025
Tags
English
India