Step into an infinite world of stories
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
ஒரு கட்சி, அதில் தீவிரமாக இருக்கும் ஒரு இளைஞன் அவனுக்கு நகர அளவில் ஒரு பதவி, இளைஞன் திருமணம் செய்து கொள்கிறான். நகரத்தில் பல கட்சிகள், பல தலைவர்கள், அவ்வப்போது தொண்டர்களுக்குள் சண்டைகள், சமரசங்கள், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் ஏற்பட்ட சண்டை வளர்கிறது. விளைவாக நிகழும் வன்முறைத் தாக்குதலில் புதிதாகத் திருமணமான இளைஞன் வெட்டப்படுகிறான். அந்த இளம் மனைவி பொட்டிழக்கிறாள், பூவிழக்கிறாள், அவற்றோடு தன் வாழ்க்கையையும்.
இது உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
இந்தச் சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது. ஒரு இளைஞன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறக்கலாம். இயற்கையின் சீற்றங்களால் இறக்கலாம். விபத்துக்களால் இறக்கலாம். மேல் மட்டத் தலைவர்கள் குளிர் அறையில் உட்கார்ந்து கொண்டு நடத்துகிற அறிக்கை மோதல்களால் தூண்டப்பட்டு அடிமட்டத்தில் நிகழும் வன்முறை அரசியலின் ஆவேசப் போராட்டத்தில் இறப்பது நியாயமா? அந்த இளம் விதவையின் கதி? அந்தக் குடும்பத்திற்காக கட்சி கண்ணீர் விடும். சிலை வைக்கும். நிதி கொடுக்கும். இழந்த வாழ்க்கையைத் தர முடியுமா?
வன்முறை அரசியலில் பாதிக்கப்படும் ஒரு பெண்ணைக் கதாநாயகியாகக் கொண்டு, நான் கண்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, காதல், பாசம் இவற்றைப் பின்னி எழுதிய கதைதான் 'வெட்டு - குத்து.... கண்ணே, காதலி!'
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
Release date
Ebook: 18 May 2020
English
India