Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
அப்பாவுக்கு மட்டும்.....
உங்களுடன்...
ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பத்திரிக்கைகளுக்குக் கவிதை அனுப்ப முனைந்த போது தோன்றிய எண்ணம்தான் இந்தப் புத்தகம். கவிதை எழில் ததும்பும் கலைப்பொருள். அதை இயல்பாக நெய்து எல்லோரிடமும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை, பத்திரிக்கைகளில் பிரசுரமான என் கவிதைகள் சிலவற்றைத் தேவை கருதிச் சில சொற்களைக் குறைத்து, சில சொற்களைச் சேர்த்து, கருத்து மாற்றம் செய்து பதிவாக்கியுள்ளேன் இந்நூலில்.
என் வாழ்க்கைச் சூழல், பயணம், காதல், குடும்பம், அரசியல், சமூகம் ஆகிவற்றை நேரடியாக உரைக்காமல் எழுபது சதவீதப் பொய்யும் முப்பது சதவீத உண்மையும் கலந்து எழுதியுள்ளேன்.
புதிய புதிய இலக்கிய வடிவ மாற்றத்தினால் கவிதைகள் வெவ்வேறு பரிமாணத்திற்குச் சென்றுள்ளன, நவீனக் கவிதை குறித்த பல்வேறு அணுகுமுறைகள் பேசப்பட்டிருக்கின்றன என்றபோதிலும் என் கருத்தைச் சொல்ல புதிய நவீன வடிவங்கள் அவசியமற்றவையாகத் தோன்றின.
நம் குடும்பங்கள் சமூகம் சார்ந்து இருக்கின்றன. ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை ஒரு சமூகத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையாகத்தான் கருத முடியும். சமூக அவலங்களை, நான் ரசிக்கின்ற காட்சிகளை, என்னை மகிழ்ச்சியாக்கும் நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள எழுத்து ஒரு ஆயுதமாக இருப்பதை நினைத்து நான் உள்ளுரப் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.
எல்லையற்ற சம்பவங்களும் காட்சிக் கூறுகளும் நெஞ்சில் விரவிக் கிடக்கின்றன. அவற்றைக் கவிதையாக்க முயலும் போது ஏற்படும் அவஸ்தையும் இன்பமும் சொல்லில் அடக்க முடியாது. பொருத்தமற்ற சொற்றொடர்களையும் புரியாத வார்த்தை அலங்காரத்தையும் தவிர்த்திருக்கிறேன்.
எனக்குப் பிடித்த தொழிலாக, நான் நேசிக்கின்ற (வேலையாகக் கவிதை இருப்பதால் கவிதைக்காக உழைக்கின்ற நேரங்கள் அலுப்புத் தருவதில்லை.
நட்புடன், நலங்கிள்ளி.
Release date
Ebook: 23 December 2019
English
India