Step into an infinite world of stories
Fantasy & SciFi
நாளை திருமணம் என்ற ரீதியில் வீடெங்கும் உறவுகள் நிறைந்திருக்க, ஆதிராவைச் சுற்றி தோழிகள் மற்றும் உறவுப் பெண்களின் கூட்டம்.
நாளை இதே நேரம் வேறொரு ஆடவன் கைகளில் இருந்து கட்டப்பட்ட மாங்கல்யம் அவள் கழுத்தை நிறைத்து இருக்கும். மனம் தான் தன்னவனை விடுத்து மாற்றானை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
எப்படி என்னால் மேகனை மறந்து மற்றொருவனை மணக்க முடியும்?
ஒருவேளை ஊரின் முக்கால் வாசி பெண்கள் கூறுவதைப்போல் திருமணம் ஆனதும் அனைத்தும் மாறிவிடுமா?
இல்லை எப்படி சாத்தியம்...எப்படி என்னால் முடியும்? என்று உள்மனம் கேள்வியெழுப்ப,
முடியும் உன் தந்தைக்காக... அவரின் பாசத்திற்காக... முடிந்துதான் ஆக வேண்டும். என்று அவளே விடையும் கூறிக் கொண்டாள் ஆதிரை .
© 2024 Kamali Maduraiveeran (Audiobook): 9798882357114
Release date
Audiobook: 6 August 2024
English
India