Step into an infinite world of stories
4.7
Biographies
சோவியத் ரஷ்யா இன்று இல்லை லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ, கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா. ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது. அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான், கீழ்ப்படிவதற்கு மட்டுமே ரஷ்யர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதுதான் வாழ்க்கை. இதுதான் விதி. லெனினின் வருகைக்கு முன்பு வரை. எத்தனையோ தேசங்களில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ரஷ்யாவில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு இணையாக இன்னொன்றை சரித்திரம் இன்றுவரை கண்டதில்லை. காரணம், இது யாரோ ஒரு குழுவினர் அரசுக்கு எதிராக நிகழ்த்திய புரட்சி அல்ல. மக்களே வீதியில் இறங்கி ஒன்று திரண்டு நிகழ்த்திக் காட்டிய புரட்சி. வழி காட்டியவர் லெனின். காகிதத்தில் இருந்த கம்யூனிஸ சித்தாந்ததுக்கு நடைமுறை வடிவம் கொடுத்து, முதல் முதலில் அதனை ஓர் ஆளும் சித்தாந்தமாக மாற்றியவர் லெனின். வீரமும் திகைப்பும் அதிரடிகளும், அடி ஆழத்தில் தேச நலன் என்கிற பொதுவான சிந்தனையோட்டமும் கொண்டது லெனினின் வாழ்க்கை. மருதனின் புலிப்பாய்ச்சல் மொழியில் லெனின் ஜிவத் துடிதுடிப்புடன் இன்னும் வாழ்கிறார்.
Russia under the Czars saw totalitarianism at its worst. The Russian people had no rights. It was their duty to do or die, not to question why - until one day, Lenin changed all that. Born Vladimir Ilyich Ulyanov, Lenin led a revolution to top all revolutions: the Bolshevik revolution. It was unprecedented in its scale and sweep and has remained unequalled through history. No revolution before or after has united a whole population against hereditary misrule in quite the same measure as Lenin's did. Lenin and the revolution he led changed the course of history, not of Russia alone, but of the whole world. The world was turned upside down with the triumph of the proletariat over imperialistic forces. It forged the unity of the working classes as never before. Lenin was no mere leader; he was a comrade as well. He became one of the people, not a distant hero. He was respected and loved by the people, not feared. He became the father of the Soviet socialist republic, the world's first socialist nation, with his exemplary leadership. Lenin's life was full of struggles. Though it began as a rebellion against monarchic rule, it continued even after the birth of Communism. He had to win many an ideological battle in an action-packed life. Listen to this audiobook to learn all about the exciting, inspiring life of one of the world's foremost leaders known for his courage and selflessness.
© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183685184
Release date
Audiobook: 18 October 2007
English
India