Step into an infinite world of stories
Biographies
தைவானின் உள்ள ‘The Corporate Body of the Buddha Educational Foundation’ நிறுவனம் புத்த மதம் பற்றி இலவசமாக அனுப்பி வரும் புத்தகங்களுள் மிக முக்கியமான ஒரு நூல் ‘Empty Cloud - The Autobiography of the Chinese Zen Master XU YUN’. Translated by Charles Luk – Revised and Edited by Richard Hunn.
120 வயது வாழ்ந்த அற்புதமான ஜென் துறவி ஸூ யுன் என்ற மகானின் சுய சரிதை இது. 120 ஆண்டுக் காலத்தில் அவர் கால்நடையாகவே சீனா, இந்தியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ஆற்றிய பணிகள் பிரமிக்க வைப்பவை.
தமிழ் மக்களுக்கு புத்தரின் போதனைகளையும் ஜென் பிரிவு தரும் குட்டிக் கதைகள், கோயன்கள் பற்றியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு, ‘புத்தரின் போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்’ மற்றும் ‘ஜென் காட்டும் வாழ்க்கை நெறி’ என்ற தலைப்புகளில் புஸ்தகா நிறுவனம் சார்பில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து வெளி வரும் நூல் இது. தமிழாக்கத்தில் சுவையான பகுதிகளின் சுருக்கம் மட்டும் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. உற்சாகமும் உத்வேகமும் ஊட்டும் ஒரு மாபெரும் மகானின் சரிதத்தை அவரே வழங்க அதைப் படிப்பது ஒரு பாக்கியமல்லவா! அவர் கூறும் சிந்தைக்கு இனிய கருத்துக்களைப் படிக்கலாம்; வாழ்வில் உயரலாம்!
Release date
Ebook: 19 March 2025
English
India