Step into an infinite world of stories
4.4
Biographies
யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான்.போரா? பேரழிவா? தொழுநோயா? உடல் சுகவீனமா? ஏழைமையா? ஆதரவற்றவரா? வாருங்கள் என்னிடம் என்று இரு கரம் கொண்டு அவர்களை அரவணைத்துக்கொண்டார் தெரசா. இந்தியா மட்டுமல்ல; உலக நாடுகள் பலவும் துன்பம் என்றதும் அம்மா என்று அழைத்துக்கொண்டு தெரசாவிடம்தான் அடைக்கலம் புகுந்தன.அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறை பக்தி, கருணை. தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை. உலகிலுள்ள துயரங்களை எதிர்த்து தெரசா நடத்திய யுத்தத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் இவை மட்டுமே.ஆனால் அதே தெரசாவின் மீது தற்போது ஏகப்பட்ட தாக்குதல்கள். தெரசா உண்மையிலேயே அதிசய சக்தி கொண்டவரா? அவர் செய்தது சேவைதானா? வெறுமனே மதப்பிரசாரமா? அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்தது சரியா? அடிப்படையில், அவர் ஆத்திகர்தானா? அப்படி என்றால், இப்போது வெளியாகி இருக்கும் நாத்திக மணம் கமழும் அவரது பல கடிதங்களுக்கு என்ன அர்த்தம்?அன்னை தெரசாவின் அத்தனைப் பரிமாணங்களையும் அவர் மீது சுமத்தப்படும் அத்தனை விமரிசனங்களையும் விருப்பு வெறுப்பற்று அலசி ஆராய்கிறது இந்நூல்.
© 2009 Kizhakku Pathippagam (Audiobook): 9788184930672
Release date
Audiobook: 1 January 2009
English
India