Step into an infinite world of stories
Short stories
பத்மினி பட்டாபிராமன் எழுதியிருக்கும் இந்த குறுநாவல் தொகுதியில் மொத்தம் ஆறு குறுநாவல்கள் உள்ளன.
முதலில் இருக்கும் வேட்கை குறுநாவல், கல்கி பவளவிழா 2015 குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு பதினேழு வயது இளைஞனை அவனது தாய், பிறந்த நாளுக்கு உடை வாங்கித்தர, நகரின் அதிநவீன ஏழடுக்கு மாலுக்கு அழைத்துப் போகிறாள். அங்கே அவன் நடந்து கொள்ளும் விதம் பலரைத் திகைக்க வைக்கிறது. தனியாக எஸ்கலேட்டர் கூட ஏறத் தெரியாதவன், ,திடீரென்று தாயின் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறான். அவனுக்கு என்ன ஆயிற்று?
அன்னபூர்ணா குறுநாவல். 2019ல் லேடீஸ் ஸ்பெஷல் இதழ் நட்த்திய போட்டியில் முதல் பரிசு வென்றது.
இமய மலைத்தொடரின் ஒரு சிகரமான அன்னபூர்ணா, நேபாளத்தில் இருக்கிறது. ட்ரெக்கிங் என்னும் மலை ஏற்றம் செல்ல பலரும் செல்லும் இடம். கொல்கத்தா, சென்னை, மும்பை, மதுரை என்று பல இடங்களிலும் இருந்தும், இளம் பெண்கள் ஆண்கள் வரும் ஒரு சிறு இளைஞர் கூட்டம் , ட்ரெக்கிங் செல்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்,எதிர் கொள்ளும் சவால்கள் என்று போகும் கதை.
“இரண்டாவது அத்தியாயம்”, “நான்கு மணி நேரம்” இரண்டு குறுநாவல்களும் குமுதம் மாலைமதியில் வெளியானவை.
நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்கும் குடும்பத்தின் இளம் பெண்ணுக்கு வரும் காதல்,அதன் விளைவுகள் சொல்வது “உன் வசம் ஆனேன்”குறு நாவல்.
தொலைக்காட்சியில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கும் இளம் பெண்ணின் அனுபவங்களை சுவைபட சொல்கிறது, “ஏழாவது சுவை”
Release date
Ebook: 17 May 2021
English
India