Step into an infinite world of stories
Fiction
இது என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இருபத்தோரு கதைகளில், இருபது கதைகள் லேடீஸ் ஸ்பெஷல், நவீன விருட்சம், கலைமகள், அமுதசுரபி, கல்கி, தினமணிக் கதிர், வலம் போன்ற பத்திரிகைகளில் வெளியானவை. என்னை இடைவிடாது எழுதிக்கொண்டிருக்க வைக்கின்றவர்கள், இவர்களுக்கு என்றும் என் நன்றிகள்!
சிதம்பரம் தாண்டி, கொள்ளிடம் பாலத்தின் மேல் மெதுவாகச் செல்லும் ரயிலில், ஜன்னல் கம்பிகளில் கன்னம் பிதுங்க, கீழே கரை புரண்டோடும் காவிரியை, விழிகள் அகலப் பார்த்துச் சென்றிருக்கிறேன். சமீபத்தில், காவிரி புஷ்கரத்திற்குச் சென்றபோது, ஆற்று மணலில் ஆழ்துளையிட்டு, நீர் இறைத்து, தொட்டிபோல் கட்டிய துலாக்கட்டத்தில் முதுகு நனையாமல் மூழ்கி எழுந்தபோது, கண்களில் மட்டும் நீர் வழிந்தோடியது. ஐம்பது வருடங்களில், நல்லனவற்றையெல்லாம் விட்டு வெகுதூரம் வந்துவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு - வருத்தம். அப்போது தோன்றியதுதான், ‘கிணற்றுக்குள் காவிரி.’ வாழ்க்கை ஓயாமல் நமக்கு எதையாவது கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது - கற்றுக்கொள்ளும் மனதும், ஆர்வமும்தான் வேண்டியிருக்கிறது.
Release date
Ebook: 24 April 2023
English
India