Step into an infinite world of stories
Fiction
அந்தந்த காலக் கட்டங்களில் அரசியல் கட்சிகள் பச்சோந்தி வண்ணம் காட்டிப் பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்தான்.
நேற்றுவரை எதிர்க் கட்சிகளாக இருந்தவை இன்று கூட்டணியாகின்றன. சென்ற கூட்டணியில் உற்சாகமாகப் பங்கு கொண்டவை அடுத்த தேர்தலில் எதிரிகளாகின்றன.
அரசியல் ஒரு கூவம். ஆனால் அதைச் சகித்துக் கொண்டே பொதுமக்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
இந்த நாவலில் அப்புசாமி சும்மா இருக்க மாட்டாமல் அரசியல் விவகாரத்தில் இறங்கும்படியாகிறது.
'பஞ்ச' பூதத்தோடு கைகோத்துக் கொண்டு கலைஞர், ஜெயலலிதா, வைகோ, சென்னா ரெட்டி, நரசிம்ம ராவ் என்று ஒருவர் விடாமல் அத்தனை அரசியல்வாதிகளையும் சந்திக்கிறார் அப்புசாமி. சந்திக்கும் ஒவ்வொருவரையும் படுத்தி எடுத்துவிடுகிறது இந்த பூதம்.
அலாவுதீனுக்கு ஒரு அற்புத விளக்கு கிடைத்தது போல ஒரு விளக்கும், அதைத் தேய்த்தால் ஏவின பணியைச் செய்யவல்ல ஒரு சோப்ளாங்கி பூதமும் கிடைத்து விடுகின்றன. நல்ல நாளிலேயே கிறுக்கத் தனத்துக்கு அவரிடம் பஞ்சமில்லை. பூதத்தோடு சேர்ந்து அவர் அடிக்கும் கொட்டங்கள் விலா நோகச் சிரிக்க வைக்கின்றன. அலாவுதீனுக்கு ஓர் அற்புத பூதம் என்றால் அப்புசாமி தாத்தாவுக்கு அரைவேக்காட்டு பூதம்.
வாசித்துப் பாருங்கள். உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு பார்ட்டும் தனித்தனியே வாய் விட்டு சிரிக்கப்போகிறது.
நூலிலுள்ள அரசியல் கருத்துக்கள் அவ்வப்போது கட்சிப் பத்திரிகைகளில் வெளிவந்தவையே தவிர கற்பனையானவை அல்ல. ஆகவே எந்தத் தனிப்பட்ட தலைவரையும் கேலி செய்யவோ, மனசு புண்படவோ எழுதப்பட்டவை அல்ல.
- பாக்கியம் ராமசாமி
Release date
Ebook: 2 February 2022
English
India