Step into an infinite world of stories
மற்ற அப்புசாமித் தொடர்களுக்கும் ‘ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகளுக்’கும் ஒரு வித்தியாசமுண்டு.
அப்புசாமி சீதாப்பாட்டி தம்பதிகளுடன், அல்ஜுமாய்ன் நாட்டு சர்வாதிகார ஷேக்கையும், அவருடைய விசித்திரமான கெடுபிடிகளையும், முன் கோபத்தையும் சந்திக்கிறோம். ஷேக் பிரபுவுக்குத் தகுந்தபடி ஈடுகொடுத்து, தன் உயிரைக் கையில் பிடித்தவாறு ஒவ்வொரு பதிலுக்கும் மும்முறை வணங்கி, நீட்டி நீட்டி முழங்கி, எஜமானனுக்குப் பதில் சொல்லிச் சமாளிக்கும் பரிதாபத்துக்குரிய அமைச்சர் ஜபாரையும் காண்கிறோம்.
எனது பெருமதிப்புக்குரிய நண்பரும், அராபிய மொழிப் பேரறிஞருமான திரு எம். அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ., பி.டி.எச். அவர்கள் அரபுச் சொற்களை நான் கையாள மிகவும் கைகொடுத்து உதவினார்கள். அவர் அன்பு, விவரணைக்கு அப்பாற்பட்டது. இதனைத் தொடர்கதையாக வெளியிட்ட குமுதத்திற்கும், நாவல் உருவாவதற்கு அரிய யோசனை களையும் உத்திகளையும் தந்து என் எழுத்தையும் கதையையும் பண்படுத்திய எனது ஆசிரியர் திரு எஸ். ஏ. பி. அவர்களின் எல்லையற்ற அன்புக்கும் அக்கறைக்கும், அழகான புத்தக வடிவில் வெளிக் கொணர்ந்திருக்கும் பூம்புகார் பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Release date
Ebook: 15 February 2022
English
India