Step into an infinite world of stories
Thrillers
நாக்பூரின் நாக வம்சத்தை சேர்ந்தவள் ரத்தி. அரண்மனை குடும்பத்தை சேர்ந்த கணேசன், ரத்தியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு ஆறு வயதில் ஒரு அழகான பெண் குழந்தை தியா. தியாவோ ஒரு நோயாளி. அவள் அடிக்கடி இரத்த வாந்தி எடுப்பவள். தியாவிற்கு ஏன் இந்த கொடுமை என்ற பரிதவிப்பில் ரத்தியும் கணேசனும் ஒருபுறம். மறுபுறம் ரத்தியையும் தியாவையும் அழித்தே தீர வேண்டும் என்று குலசேகர ராஜா நினைக்க காரணம் என்ன? தன் மருமகனான கணேசனை தன் வழிக்குக் கொண்டு வந்து தன் மகள் மஞ்சுவை திருமணம் செய்து வைக்க இவர் செய்த சூழ்ச்சிகள் என்ன? இந்த சூழ்ச்சியில் சில அமானுஷ்யங்களும் சேர்வதால், ரத்தி, தியா மற்றும் கணேசனின் வாழ்க்கை நிலைகுலைகிறது. இந்த சூழ்ச்சியில் இருந்து இவர்கள் மூவரையும் காப்பாற்றியது யார்? குலசேகரனின் சூழ்ச்சிவலை கிழித்தெரியப்பட்டதா? அமானுஷ்யமும் மர்மமும் நிறைந்த இந்த நாவலை கொஞ்சம் திகிலோடு வாசிப்போம் வாருங்கள்…
Release date
Ebook: 6 March 2025
English
India