Step into an infinite world of stories
Fiction
வினோத்தின் மாமன் மகள் நர்மதா. அவர்களது பள்ளிக்காலத்தில் இரு குடும்பமும் கோவையில் இருந்ததால் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக இருந்தனர். வினோத்தின் தந்தைக்கு மும்பைக்கு மாற்றலாகி விட இருவரும் பிரிகின்றனர். பிரியும் ஒரு ஒப்பந்தம் செய்கின்றனர், “எந்தக் காரணத்தைக் கொண்டும், நாம் போனில் பேசவோ...வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பிக் கொள்ளவோ வேண்டாம்...! உன் உருவம் எனக்குள் சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்...கல்யாணத்தின் போது பார்த்துக் கொள்வோம்...! அப்பத்தான் திரில்லாய் இருக்கும்” என்று.
அதன்படியே வாழ்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு அண்ணன் மகள் நர்மதாவை வினோத்திற்கு பெண் கேட்க வந்த வினோத்தின் தாய் அதிர்கிறாள். நர்மதா வினோத்தை விட முக்கால் அடி உயரமாயிருக்க, கல்யாணம் நடக்காது என முடிவு செய்கிறாள். ஆனால் வினோத்தும் நர்மதாவும் உயரம் பெரிய விஷயமில்லை, என்று உறுதியாயிருந்து திருமணம் செய்கின்றனர்.
தாம்பத்ய வாழ்க்கையில் பல நேரங்களில் அந்த உயரம் காரணமாய் சந்தேகங்களும், சண்டை சச்சரவுகளும் வர, அதை எப்படி சந்திக்கின்றனர்...? வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கின்றனர்...? என்பதைக் கதையாக்கியிருக்கும் நாவலாசிரியர், இறுதியில் மாபெரும் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கொண்டு வந்து வாசகர்களின் மனத்தைக் சோகமாக்கி விடுகின்றார்.
Release date
Ebook: 5 February 2020
English
India