Step into an infinite world of stories
1 of 26
Non-Fiction
தமிழின் முன்னணி எழுத்தாளரான சிவசங்கரியின் பதினாறு வருஷ உழைப்பின், தவத்தின் பலனாக இந்திய மொழிகளில் முதல் முறையாக உருவான மாபெரும் இலக்கிய பங்களிப்பு, நான்கு தொகுதிகளை கொண்ட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற படைப்பு.
இந்திய அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 மொழிகளின் முக்கிய எழுத்தாளர்கள், கவிஞர்களின் நேர்காணல்கள்: மொழிபெயர்ப்புகள் இத்தொகுதிகளுள் அடங்கியுள்ளன.
இந்தியாவின் பல மாநிலங்களில் பயணித்து, சம்பந்தப்பட்ட படைப்பாளிகளை சந்தித்து எடுத்த நேர்காணல்களோடு களின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும், அவர்களின் அந்தந்த மொழிகள் குறித்தான கலாச்சார இலக்கிய வரலாற்றை வெளிப்படுத்தும் அறிஞர்களின் கட்டுரைகளும், அனைத்து மாநிலங்களின் பயணக் கதைகளும் இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
'தெற்கு தொகுப்பில் மலையாளம், தெலுங்கு. கன்னடம், தமிழ் மொழிகளும்: 'கிழக்கு தொகுப்பில்' பெங்காலி, மணிப்பூரி, ஒரியா, அசாமீஸ், இந்திய நேபாளி மொழிகளும்: 'மேற்கு தொகுப்பில் - மராத்தி, குஜராத்தி, கொங்கணி. சிந்தி மொழிகளும்; இறுதியாக, 'வடக்கு தொகுப்பில்' - ஹிந்தி, உருது, பஞ்சாபி, காஷ்மீரி, சமஸ்கிருதம் மொழிகளும் நான்கு தொகுதிகளாக ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ளன.
சிவசங்கரியின் பயணங்கள், நேர்காணல்கள் TAD பன்மொழி படைப்பாளிகளிடையே காணப்படும் பல முக்கிய ஒற்றுமைகளை தற்சமயம் தேசத்தில் இருக்கும் பிரச்சினைகள்: இளைய சமுதாயத்தின் ஆரோக்கியமான எதிர்காலம் குறித்தான கவலைகள் போன்றவற்றை தெள்ளத் தெளிவாய் நம்மை உணர வைக்கின்றன.
இலக்கிய மொழிபெயர்ப்புகள் மூலம் ஒரு மாநிலத்தைச் சார்ந்த இந்தியர்களை இதர மாநில இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இப்பணியின் தலையாய குறிக்கோள்.
Release date
Ebook: 8 September 2025
English
India
