Step into an infinite world of stories
Short stories
'வாரக் கடைசியில் சின்ன வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி, மைசூர் ரசம், கெட்டித் தயிர், பொறித்த அப்பளம் கூட்டணியை ஒரு பிடி பிடித்துவிட்டு மணக்கும் கையோடு உங்கள் கட்டுரைகளைப் படித்து சிரித்து ரீசார்ஜ் ஆகி, திங்கள் கிழமை அலுப்புகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் தயாராகிறேன்' என்று விமரிசனம் செய்யும் வாசகர்களுக்கும், பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தொடர்ந்து எழுத இடமளிக்கும் வட்டார ஏடுகளின் ஆசிரியர் கே. எஸ். ராமகிருஷ்ணனுக்கும், வெற்றி எட்டு திக்கும் எட்ட என் உளமார்ந்த நன்றிகள். 'என்னிடம் நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்' என்ற காந்தியை, 'உமக்கு ஏனய்யா அந்த வேலை? நான் செய்து முடிக்கிறேன்' என்று சுட்டார் ஓர் இந்தியக் குடிமகனார். காழ்ப்புணர்ச்சியான tumour-ஐ தன் இதயத்திலிருந்து கிள்ளி எறிந்து விட்டு humour-ஐ ஜெனரல் டயர் வளர்த்திருந்தால் ஜாலியன் வாலாபாக் என்கிற களத்தில் காலத்தால் கழுவ முடியாத ரத்தக் கறைகள் படிந்திருக்காது அல்லவா? இதயத்தை கனக்க வைத்த ஜாலியன்வாலாபாகை, லேசாக்கும் ‘Jolly'யன் வாலா Bag - ஆக மாற்றியுள்ளேன்.
- ஜே.எஸ். ராகவன்
Release date
Ebook: 18 December 2019
English
India