Step into an infinite world of stories
இலக்கியத்திலும் ஜாதிப் பிரிவா? என்று கேட்கலாம்.
ஆம்!
நாவல் இலக்கியம் இன்று பலப்பல வடிவங்களை எடுத்து வாசகர்கள் ரசனைக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கிறது. (சிலர் இந்த விருந்து மருந்துக்குரியது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.)
வடுவூர் துரைசாமி ஐயங்கார் காலத்து நாவலுக்கும் இன்றைய எங்கள் நாவல்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு எத்தனை வேறுபாடு.....!
வேகம்....
வேகம்...
வேகம்...
இது இன்றைய உலகின் போக்கு மட்டுமல்ல நாவல்களுக்குத் தேவையானதும் கூட... நாவல்களில் இதைக் கலக்க முடியாதவர்கள் பின் தங்கி விடுகின்றார்கள்.
நீட்டி முழக்கி நெடிது வளர்க்கும் வார்த்தை வியாக்யானங்களைப் புறந்தள்ளி, 'ம்... சரி... ஓ-கே... பார்க்கலாம்' என்கிற ஒற்றை இரட்டை வார்த்தைகள் இன்றைய நாவல் இலக்கிய அங்கமாகிவிட்டது.
இது ஆரோக்யமானதா? ஆரோக்யமற்றதா? என்ற கேள்விக்கு இடமில்லை.
வாசகர்கள் வளர்ந்து விட்டான்.
அவனுக்குச் சுற்றி வளைப்பது இப்போது சோர்வைத் தரும் விஷயம். நேரடியாக நெத்தியடியாக அவனிடம் பேச வேண்டும். அதில் ஆழமும் வேண்டும்.
இந்த முயற்சியில் இன்று பல நாவலாசிரியர்கள் சரித்திரம் படைக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் மறைமுக குருவாக இருந்து பாதை காட்டிக் கொண்டிருப்பவர்கள் ராகி.ரங்கராஜன், ஜெயகாந்தன் போன்றவர்கள்.
இதில் ரா.கி.ர எழுத்து மிகமிக சுவாரஸ்யமானது ஜெயகாந்தன் எழுத்து மிகமிக ஆழமானது.
இவர்கள் இருவரின் இணைப்பான படைப்புகளாய்ப் பல நாவல்கள் இன்று பலரால் படைக்கப்பட்டுப் பாராட்டுக்குள்ளாகி வருகின்றன.
அவர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக மகிழ்கிறேன்.
எந்த ஒரு நாவலிலும் ஏதாவது ஒரு புதுச் செய்தி தருவது என் நோக்கம். சற்று informative ஆக அதே சமயம் காலத்திற்கு ஏற்றாற் போல் என்கிறபாணி என் பாணி.
இந்த நாவல்களிலும் அதைப் பார்க்கலாம்.
'தீர்க்கமான முடிவு, திடமான செயல்பாடு, பார்வையில் தொலை நோக்கு' - இவை மூன்றும் இவரிடம் நான் காணும் சிறப்பம்சங்கள்.
இந்தியத் தொழில் துறையே வியக்கும் எங்களின் நிர்வாக இயக்குனர் உயர்திரு. சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் மணியான தேர்வினில் இவரும் ஒருவர்.
என் வாழ்வில் திடமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணங்களில் நான் ஒருமுறை இவரை நினைத்துக் கொள்வேன்.
எனக்குள் அப்படி ஒரு INSPIRATION ஆக இருக்கும் இவருக்கு இந்த நூலைச் சமர்ப்பிப்பதில் மிக மகிழ்கிறேன்.
நன்றி
பணிவன்புடன்
இந்திரா சௌந்தர்ராஜன்.
Release date
Ebook: 30 September 2020
English
India