Step into an infinite world of stories
கண்மூடித்தனமான ஒரு வழக்கத்தைக் கண்டிக்கத்தானே வேண்டும்?அப்படிப்பட்ட கண்டனங்களை அரசியல்வாதிகள் மேடை போட்டு மைக் வைத்துக் கண்டிப்பார்கள்.
எழுத்தாளன் பேனாவுக்குள் மசியை ஊற்றித் தன் கண்டனத்தை கதை, நாவல் என்ற அமைப்பில் வெளியிடுகிறான் - வலிக்காமல் ஊசி போடும் திறமையான டாக்டர் போல.
பால்யத் திருமணம் என்ற ஒரு கொடுமை நம் நாட்டில் இன்னமும் இருந்து வருகிறது. (இல்லாவிட்டால் பஸ் பின்னாலெல்லாம், கல்யாணமாக வேண்டுமானால் மணமகனுக்கு இத்தனை வயசிருக்க வேண்டும். மணமகளுக்கு இன்ன பிராயம் பூர்த்தியாயிருக்க வேண்டும் என்றெல்லாம் அரசு விளம்பரம் எச்சரிக்குமா என்ன?
இந்த நாவல் அந்த விஷயத்தைத்தான் உங்களிடம் எடுத்துக் கொண்டு வருகிறது. கதாநாயகி கதம்பா எனது இல்லத்தரசியின் 'ஒன்ஸ் அப் ஆன் எ டைம்' (once upon a time) தோழி. அழகிய பேராசிரியை. அவள் திருமணம் ஆனவளா, ஆகாதவளா? எங்களுக்கெல்லாம் தெரியாது. ஏன், அவளுக்கே தெரியாது. பேராசிரியை கதம்பாவின் வாழ்க்கையில் எனது கற்பனையைப் புகுத்தியதன் விளைவே கதம்பாவின் எதிரி. கதம்பாவின் எதிரி ஏற்காட்டில் ஒளிந்து கொண்டிருந்தான். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வாசகர்களாகிய நீங்களாவது கண்டுபிடியுங்கள்.
Release date
Ebook: 3 January 2020
English
India