Step into an infinite world of stories
மடிமையைக் கொடுத்து, குடிமையைக் கெடுக்கும் அடிமை விலங்கை ஒடிக்க ஆர்த்து எழுந்து, ‘அச்சம் தவிர், ஆண்மை தவறேல்’ என்று முழங்கிய போர்முரசு! எல்லை இல்லாத உரிமை வானில், சிறகை விரித்துப் பாடிப்பறந்த கரிசல் குயில்! கொல்லவந்த கொடும்பகைக்கு எதிராகக் கூர்வேல் ஏந்தி, வெல்லத்தமிழை வெல்லும் தமிழ் ஆக்கிய கவிதைப் போராளி! மண் அடிமை மட்டும் அல்ல, பெண் அடிமையும் மாய்க்கப்படவேண்டும் என்று, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தியவன்.
வறுமைக் காட்டில் சஞ்சரித்தபோதும் பெருமை குன்றாமல், கொள்கை பிறழாமல், பீடுற நிமிர்ந்து நின்று சிறுமை செய்தோரைச் செந்தீயாய் எரித்தவன். ‘நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவது உண்டோ?’ என்று மனம் நொந்து, மானுடம் பயனுற வாழ்ந்திட வல்லமை கேட்டவன் கவிஞன் பாரதி.
Release date
Ebook: 7 October 2021
English
India